உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை நடிகையிடம் மோசடி நடிகர் குறித்து விசாரணை

துணை நடிகையிடம் மோசடி நடிகர் குறித்து விசாரணை

சென்னை:திருமணம் செய்து கொள்வதாக கூறி, துணை நடிகையுடன் நெருங்கி பழகி, 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த, காதல் பட நடிகர் சுகுமார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நடிகர் பரத் நடிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், 2004ல் வெளிவந்த காதல் படத்தில், பரத் நண்பராக நடித்தவர் சுகுமார். இவர், வடபழனியில் வசித்து வரும், 35 வயதான துணை நடிகையை, திருமணம் செய்வதாகக் கூறி நெருங்கி பழகி உள்ளார். ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு இருவரும் சென்றதை, சுகுமார் வீடியோ எடுத்துள்ளார்.தனக்கிருந்த நெருக்கத்தை பயன்படுத்தி, துணை நடிகையிடம், 6 லட்சம் ரூபாய் வரை வாங்கி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட துணை நடிகை, வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கடந்த மாதம், இருவரையும் நேரில் அழைத்து விசாரித்தனர். அப்போது, துணை நடிகையிடம் பணம் வாங்கியதை ஒப்புக் கொண்ட சுகுமார், பணத்தை திரும்ப தருவதாகக் கூறியுள்ளார். ஆனாலும், பணத்தை வழங்கவில்லை.இதுகுறித்து, துணை நடிகை மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, இருவருக்கும் இடையே, பணப்பரிமாற்றம் தொடர்பாக நடந்த பேச்சு தொடர்பான ஆடியோவை வழங்கி உள்ளார். இதுகுறித்து மீண்டும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankaranarayanan
ஜன 17, 2025 09:24

நடிகைகளுக்கு பணம் கொடுத்து ஏமாந்தவர்கள்தான் ஒரு பெரிய லிஸ்ட் உள்ளது இங்கே அதிசயமாக நடிகைகளிடமிருந்தே பணம் பெற்றுக்கொண்ட காதலனை இப்போதுதான் மக்கள் பார்க்கிறார்கள் சபாஷ் இப்படியும் ஏமாற்றம் ஏமாறல் சினிமா உலகில் இருக்கிறதா


Ganapathy Subramanian
ஜன 17, 2025 11:25

உங்களுக்கு நயன்தாரா பிரபுதேவா சங்கதிகள் தெரியாதா?


முக்கிய வீடியோ