உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெற்கு ரயில்வேயில் 7 கூடுதல் ரயில் பாதை அமைக்க சர்வே பணி

தெற்கு ரயில்வேயில் 7 கூடுதல் ரயில் பாதை அமைக்க சர்வே பணி

சென்னை : தெற்கு ரயில்வேயில் ஏழு வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதை அமைக்க, இறுதிகட்ட சர்வே பணி துவங்கப்பட்டுள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் முக்கிய ரயில் பாதையை இணைத்து, கூடுதல் ரயில் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, ஏழு வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டு, அதற்கான இறுதிகட்ட ஆய்வுப் பணி, 7.80 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வழித்தடங்கள் அமைப்பு, பயணியர் எண்ணிக்கை, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட விபரங்கள் குறித்த அறிக்கை, அடுத்த சில மாதங்களில், ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படும்.

ரயில்வே ஒப்புதல் பெற்ற பிறகு, திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி மேற்கொள்ளப்படும். இந்த ரயில் பாதை, பயன்பாட்டிற்கு வரும்போது, கூடுதல் ரயில் வசதி கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Kaliyaperumal
ஜன 09, 2024 23:28

விழுப்புரத்திலிருந்து திருச்சி க்கு அதிகாலை 5.00மணிக்கு ஒரு முன்பதிவில்லா பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தவழி தடத்தில் இதே நேரத்தில் ரயில் இயக்கப்பட்டு வந்ததை நினைவுக்கு கொண்டு வருகிறோம்


P.Subramanian
ஜன 08, 2024 16:12

சென்னை to திருநெல்வேலி 12631,சோழவந்தானில் அதிகாலை 3.30க்கு நின்று செல்கிறது. அதற்குப்பதிலாக சென்னை to மதுரை பாண்டியன் 12637 SF, காலை 5.00 மணிக்கு நின்று சென்றால் நல்லது.


‌ P.Ramkumar
ஜன 07, 2024 23:43

திருச்செந்துருலிருந்து சென்னை எக்மோர் செல்லும் செந்தூர் அதிவிரைவு வண்டியின் நேரம் மாற்ற வேண்டும்.திருச்செந்தூரிலிருந்து முன்னதாக புறப்பட்டு காலையில்8மணி அளவில் எக்மோர் வரும்படி நேரம் மாற்ற வேண்டும்.தெற்கு ரயில்வே இதனை பரிசிலிக்க வேண்டும்.


Naagarazan Ramaswamy
ஜன 05, 2024 10:56

What happened to laying track between Tindivanam and Truvannamalai. Survey was supposed to have completed a few years back


NATARAJASUNDARAM
ஜன 04, 2024 09:35

1.சென்னை டு காரைக்குடி கம்பன் எக்ஸ்ப்ரஸ். வழி: மயிலாடுதுறை, திருவாரூர்,பட்டுக்கோட்டை. 2.சென்னை டு இராமேஸ்வரம். வழி: மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை. மேற்கண்ட இரண்டு வழித்தடங்கள் பிராட்கேஜாக மாற்றப்பட்டதால் நிறுத்தப்பட்டது. தற்போது பிராட்கேஜாக மாற்றப்பட்டு 10 ஆண்ட்டுகளுக்களுக்கு மேலாகிறது.ஆனால் இந்த 2 ரயில்களும் இதுநாள் வரை இயக்கப்படவில்லை.இதில் சென்னை டு இராமேஸ்வரம் ரயி்ல் 25 - 30ஆண்டுகளுக்கு முன் போட் மெயில் (Boat Mail) என அழைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எக்மோரில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழித்தடங்களில் மேற்கண்ட ரயில்கள் இயக்கப்பட்டால் பின்தங்கிய டெல்டா மாவட்ட மக்கள் பயனடைவார்கள். மேலும் வழித்தடங்களில் இயக்கப்பட்ட மயிலாடுதுறை டு காரைக்குடி இரு மார்க்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி டு மயிலாடுதுறை இருமார்க்கம் லோக்கல் ரயில்களும் இதுநாள் வரை இயக்கப்படவில்லை.இதேபோல் சென்னையிலிருந்து- மயிலாடுதுறை வழியாக-திருச்சி மார்க்கமாக செல்லும் பகல் ரயில் சோழன் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திற்கும் மற்றும் மயிலாடுதுறை வழியாக சென்னை இரவு செல்லும் ரயிலுக்கும் இணைப்பு ரயில்களும் இது நாள் வரை இயக்கப்படவில்லை. ரயில்வே வாரியமும்,திருச்சி , தென்னக ரயில்வே பொது மேலாளரும் அருள்புரிவார்களா. நன்றி. எதிர்பார்புடனும்,ஏக்கத்துடனும் . மு.நடராஜசுந்தரம்,திருநெல்லிக்காவல், திருவாரூர் மாவட்டம்.


Shanmugam L
ஜன 04, 2024 07:44

New railway line may be provided between Ambathor and thiruvannamallai viya sriperumandur, kancheepuram and vandavasi. If it is successful, more people will avail benefit. Apart from this, new airport is coming to parandur near kancheepuram. Hence this plan is must to the public.


Shanmugam L
ஜன 04, 2024 07:35

அம்பத்தூர், sriperumandur, kancheepuram, வந்தவாசி, thiruvañamalai வழி இரயில் பாதை போடலாம். நல்ல முன்னேற்றம் வரும்.


Theensai
ஜன 04, 2024 07:30

தேனி திண்டுக்கல் பெரியகுளம் வழியாக ரயில் பாதை அமைந்தால் சிறப்பு


M.Rajasekar
ஜன 03, 2024 21:36

கும்பகோணம் முதல் விழுப்புரம் அல்லது கும்பகோணம் முதல் பண்ருட்டி வரை ரயில் பாதை அமைந்தால் நன்று...


அ.சகாயராசு
ஜன 03, 2024 20:01

தஞ்சாவூர் வழி கந்தர்வகோட்டை,புதுக்கோட்டை மதுரை வழித்தடம் உருவாக்கலாம் ஏற்கனவே இடம் தேர்வு செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை