உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த தவறுகிறது : கிஷன் ரெட்டி

மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த தவறுகிறது : கிஷன் ரெட்டி

கோவை: பல திட்டங்களை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள போதும் அதை முறையாக செயல்படுத்துவதில் மாநில அரசு தவறி வருகிறது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jzp0p3q2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை மேரியட் ஹோட்டலில் பா.ஜ., மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இதில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசியது,கடந்த 10 ஆண்டுகால மோடி அரசின் கடின உழைப்பு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, புதிய இந்தியாவுக்கான நோக்கம், பாதுகாப்பு, புதிய வளர்ச்சி கொள்கை காரணமாக மூன்றாவது முறையாக பா.ஜ.வை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.குறிப்பாக தமிழகத்திற்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் இந்த பட்ஜெட்டில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக ரயில்வே துறை திட்டங்களுக்காக கடந்த ஆண்டை விட ரூ.300 கோடி அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல திட்டங்களை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள போதும் அதை முறையாக செயல்படுத்துவதில் மாநில அரசு தவறி வருகிறது சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்திற்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது. சிறு குறு தொழில்கள் நிறைந்த கோயம்புத்தூர் போன்ற பகுதிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kesavan
ஜூலை 29, 2024 10:41

மாநில அரசு என்ன சொல்லுதோ என்ன கேக்குதோ அதை கொடுத்துட்டு போ நீ சொல்றத செய்வதற்கெல்லாம் இவருக்கு நாங்க ஓட்டு போடல இவரு என்ன சொல்றாரோ அதை நீ செய் அவர் என்ன கேட்கிறாரோ அதை கொடு மெட்ரோ ரயிலுக்கு பணம் கொடுத்தியா முதல்ல அத பேசு எய்ம்ஸ் வந்துடுச்சா அத பேசு அப்படியே பணத்தை அள்ளி குடுத்துட்டாரு இவரு ...குடியை கெடுக்கிறது தவிர உங்க திட்டத்துல வேற என்ன இருக்கு பொறுக்கி பயலுக ரவுடி பயலுக இவர்களை எல்லாம் கட்சியில் சேர்த்துக்கொண்டு தினம் ஒரு பொய்யை பரப்பிக் கொண்டு பித்தலாட்டம் செய்வதை தவிர வேறு என்ன இருக்கு உங்க கட்சியில கிளம்பு கிளம்பு இந்த மாதிரி பித்தலாட்டத்தை எல்லாம் உ.பி பீகாரோட நிறுத்திக்கோ தமிழ்நாட்டில் இது செல்லாது


சித்தறஞ்சன்
ஜூலை 29, 2024 08:30

திருட்டுத் திமுக கும்பல் அரைவாசிக்கு மேல் சுருட்டி விடும். பின்பு எங்கே மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது


venugopal s
ஜூலை 28, 2024 10:56

எத்தனை மத்திய பாஜக அரசின் அமைச்சர்கள் வந்து தமிழகத்துக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கூவினாலும் தமிழக மக்கள் பாஜகவை நம்ப மாட்டார்கள்!


Mohanakrishnan
ஜூலை 28, 2024 00:42

திருட்டு மாடலை திருத்த முடியாது எலேச்டின் கமிஷன் ஆக்ஷன் எடுத்தால் உண்டு காசு கொடுத்து ஓட்டு வாங்கும் வரை 2 திருட்டு கூட்டம் ஆடுவார்கள்


S. Narayanan
ஜூலை 27, 2024 23:14

மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் செயல் படுத்தினால் மக்களிடம் திமுக க்கு நல்ல பெயர் கிடைக்காது. அதனால் ஓரிரு திட்டங்களை பெயர் மாற்றி தங்கள் திட்டம் போல மக்களிடம் பிரகடன படுத்துகிறார்கள்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ