உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 11 நகராட்சிகள் தரம் உயர்வு தமிழக அரசு உத்தரவு

11 நகராட்சிகள் தரம் உயர்வு தமிழக அரசு உத்தரவு

சென்னை:தமிழகத்தில் 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, ஆண்டு வருமானம் 15 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால், சிறப்பு நிலை; 9 கோடியில் இருந்து 15 கோடி ரூபாய் வரை தேர்வு நிலை; 6 கோடி முதல் 9 கோடி ரூபாய் வரை முதல் நிலை; 6 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் இரண்டாம் நிலை என, நகராட்சிகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.வருவாய் உயர்ந்தால், தரம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 11 நகராட்சிகளை தரம் உயர்த்தி, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை