உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலைக்களமாக மாறிய தமிழகம்: இபிஎஸ் குற்றச்சாட்டு

கொலைக்களமாக மாறிய தமிழகம்: இபிஎஸ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது என அதிமுக., பொதுச்செயலாளர் இபிஎஸ்., கூறியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக கொலை தொடர்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது. விடியா திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்? எப்படி தினந்தோறும் அச்சமின்றி வேலைக்கு செல்ல முடியும்? எப்படி நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்? எப்படி புதிய தொழில் முதலீடுகள் வரும்? அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டும் செலுத்தும் கவனத்தை சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளில் இனியாவது செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Durai Kuppusami
ஆக 06, 2024 08:42

இந்த மாவு ரொம்பவும் புளிச்சி போச்சு வேற மாவ ருப்பு...நடிக்காத உன்ன பத்தி தொண்டர்களுக்கு நல்லாவே தெரியும்....


மணியன்
ஆக 05, 2024 08:44

எதிர்கட்சிகளை கூட்டணி அமைக்க விடாமல் சதி செய்து திமுகவை ஜெயிக்க வைத்துவிட்டு நாடகமாடும் துரோகி எடப்பாடி.


தமிழன்
ஆக 04, 2024 22:00

ஒரு ஐபிஎஸ் அதிகாரி பதவி பெற்றதற்கு போஸ்டர் அடித்து ஓட்டுகிறார்கள் என்றால், அந்த ஐபிஎஸ் அதிகாரி பதவி விலக வேண்டும்.


என்றும் இந்தியன்
ஆக 04, 2024 18:33

திமுக இனிமேல் திம்மிக்கட்டை முட்டுக்கட்டை கத்தி கட்சி என்று அழைக்கப்படும்


மோகனசுந்தரம்
ஆக 04, 2024 15:29

அடப் போயா நீயும் தேஞ்சு போன ரெக்கார்டு மாதிரி அதையே சொல்லிட்டு இருக்கே. சொல்வதற்கு வேறு ஒன்றும் கிடைக்கவில்லையா. இல்லை பயமா


Naga Subramanian
ஆக 04, 2024 15:15

மக்கள் தொகை பெருக்கத்தைக் குறைக்க எடுத்த வழிதான் இது. இதே திராவிட ஆட்சி கேரளத்திலும் இருந்திருந்தால், வயநாடு பிரச்சனை ஏற்பட்டிருக்க வழியே கிடையாது. அந்த மலைதான் பிரச்சனை அவர்கள் அறிந்து, அதை எப்பொழுதோ சல்லி சல்லியாக பெயர்த்து எடுத்திருப்பார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.


என்றும் இந்தியன்
ஆக 04, 2024 18:36

அதாவது இந்து மக்கள் தொகையை குறைக்க திருட்டு திராவிட மடியில் அரசு எடுத்த ஒரே வழி என்று சொல்லுங்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை