உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாறிய தமிழகம்; இ.பி.எஸ்., பாய்ச்சல்

குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாறிய தமிழகம்; இ.பி.எஸ்., பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு மாற்றி உள்ளது' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க., ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?' என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ufs2s5gq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு மாற்றி உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனம். இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு தி.மு.க., முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Sekar Shunmugaraj
நவ 30, 2024 13:24

அதாவது...நீங்கள் தொடங்கி வைத்ததை தொடர்கிறார்கள் என்கிறீர்களா?


raja
நவ 29, 2024 18:12

அய்யோ ஹயோ... இவருக்கு இந்த ஆட்சி நாலு வருசம் முடியிறப்போ இப்போ தான் இது தெரியுது... தமிழ் மக்களுக்கு எப்போ கள்ள குறிச்சி கலவரம், கள்ள சாராய சாவு கோவை குக்கர் மற்றும் சிலிண்டர் குண்டு வெடிப்பு ஏற்பட்டதோ அப்போவே சட்டம் ஒழுங்கு மட்டரகமா இருக்குன்னு தெரிந்து விட்டதே...


Sampath Kumar
நவ 29, 2024 17:58

உங்க ஆட்சியிலும் இப்படித்தான் இருந்தது கஞ்ச க்ஹுட்டக , சாராய சாவு துப்பாக்கி சூடு எது எல்லாம் என்ன சார் ஏன்னமோ பாலும் தேனும் பெருகி ஓடுவது போல புய்ல்டு உப்பு கொடுப்பதை அரசியில் வியாதிகள் என்று நீர்த்துவர்களா சே சே


Chandra Mouli
நவ 29, 2024 17:45

உங்களுக்கும் பங்கு உண்டு


Pandianpillai Pandi
நவ 29, 2024 17:37

தப்பி தவறி முதலமைச்சராக தாங்கள் இருந்தபோது துப்பாக்கி சூடு செய்தியை காலையில் பேப்பர் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று மீடியா பக்கம் ஒளிந்து கொண்ட தாங்கள் மீடியாவில் வரும் செய்திகளுக்கு மாண்புமிகு முதல்வரை காரணம் காட்டுவது எதை காட்டுகிறது உங்கள் குரோத தனத்தை தானே காட்டுகிறது. சசிகலா அம்மையாரால் முதலமைச்சராக ஆக்கப்பட்ட தங்களது காலத்தில் தான் பொள்ளாச்சி சம்பவவும் நடந்தேறியது. அன்று ஒரு நடவடிக்கையும் எடுக்காத தாங்கள் மாண்புமிகு முதல்வரை எந்த விதத்தில் விமர்சனம் செய்கிறீர்கள் . சிறையில் தண்டனையில் இருந்த பெருமளவு ரவுடிகளை நன்னடத்தை காரணம் காட்டி வெளியில் விட்டவர் தானே தாங்கள். இப்போது குற்ற சம்பவங்களில் யார் சிக்குகிறார்கள்.


M Ramachandran
நவ 29, 2024 16:33

இங்கு கொஞ்ச நாள் பொருங்கள் இங்கும் ஆறு ஓடும். எதற்கும் கழுத்து ஜாக்கிரதை. கழுத்து உடலுடன் மூளையை இணைக்கும் இருந்தால் தான் வாய் பேசமுடியும்.


joe
நவ 29, 2024 15:38

எதிர் கட்சி தலை வராகிய நீங்களும் இந்த அரசியலில் வேடிக்கை பார்க்கிறீரா .தற்போது ஊழலின் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்துகொண்டு ஊழலை வெற்றி வழியில் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் .இதுதாண்டா திராவிடநாடு .


joe
நவ 29, 2024 15:34

திராவிட மாடலில் ரவுடித்தனம் அடக்கு முறை இவைகள் மக்கள் ஜனநாயகத்திற்கு எதிராக வெற்றி நடை போடுகிறது .தற்போது தமிழகம் துரோகிகளின் கையில் .


joe
நவ 29, 2024 15:28

2G ஊழல் குற்றவாளிகளுக்கு தமிழக முதல்வரே அடைக்கலம் கொடுத்திருக்கிறார் .மக்களின் பணத்தை கருணாநிதிக்கு சிலை வைக்கவும் என சுய நல அரசியல் வாதியாக சர்வாதிகாரியாக வலம் வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியையும் மறைத்தும் ஊழல் சாம்ராஜ்யம் இங்கே தமிழகத்தில் வெற்றி நடை போடுகிறது .வாழ்க ஊழல் திராவிடமாடல்.


joe
நவ 29, 2024 15:22

2G ஊழல் குற்றவாளிகளுக்கு முதல்வரே அடைக்கலம் கொடுத்திருக்கிறார் .


முக்கிய வீடியோ