மேலும் செய்திகள்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் 9.38 லட்சம் பேர் பயன்
4 minutes ago
முன்னாள் எம்.எல்.ஏ., மனு அரசுக்கு ஆறு வாரம் கெடு
4 minutes ago
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடக்கும் 12 மாநிலங்களில், வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வினியோகிப்பதில், தமிழகம் 11ம் இடத்தில் உள்ளது. அந்தமான் நிக்கோபர், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்திய பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழகம், உ.பி., மேற்கு வங்கம் என 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடக்கிறது. இம்மாநிலங்களில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கு கின்றனர். இப்பணி கோவா, லட்சத்தீவு பகுதியில், 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கணக்கெடுப்பு படிவ வினியோகத்தில், புதுச்சேரி 12ம் இடத்தை பிடித்துள்ளது; இங்கு, 95.15 சதவீத படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய இடத்தை தமிழகம் பிடித்துள்ளது; இங்கு, 95.78 சதவீத படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட படிவம் பதிவேற்றம் செய்வதில், லட்சத்தீவு முதலிடத்தில் உள்ளது; 77.30 சதவீத படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. கேரளா கடைசி இடத்தில் உள்ளது; இங்கு, 10.58 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 14.12 சதவீதம் படிவங்கள் மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 35.86 சதவீத படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
4 minutes ago
4 minutes ago