உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூலுார் வானில் சூப்பர் கோலம்; ஹெலிகாப்டரில் அசத்திய போர் விமானிகள்!

சூலுார் வானில் சூப்பர் கோலம்; ஹெலிகாப்டரில் அசத்திய போர் விமானிகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: சர்வதேச ராணுவ விமான தளவாட கண்காட்சியை முன்னிட்டு, கோவை சூலுார் தளத்தில், ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி நடந்தது. விமானப்படை வீரர்கள், துப்பாக்கியை வீசிப்பிடித்து சாகசம் செய்து அசத்தினர்.இந்திய விமானப்படை சார்பில், 61 ஆண்டுகளுக்கு பிறகு, 'தாரங் சக்தி 2024' என்ற பன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி, இந்தியாவில் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mr69ghhz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல் கட்ட பயிற்சி ஆக., 6 முதல் 14ம் தேதி வரை சூலுாரிலும், இரண்டாம் கட்ட பயிற்சி செப்., 1 முதல் 14ம் தேதி வரை, ராஜஸ்தான் ஜோத்பூரிலும் நடக்கிறது.

சாகச நிகழ்ச்சிகள்

ஆக., 6ம் தேதி முதல் விமான பயிற்சியில் இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகள் பங்கேற்று, ஒத்திகை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தேஜஸ், ஜெர்மனியின் டைபூன் உள்ளிட்ட உயர் ரக போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன. இந்திய விமான படையின் சார்ங், லைட் காம்பேட் ஹெலிகாப்டர், தேஜாஸ் மற்றும் ஐரோப்பிய போர் விமானமான டைப்பூன் உள்ளிட்ட விமானிகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய விமானப்படை வீரர்கள், துப்பாக்கியை வீசிப்பிடித்து சாகசம் செய்தும் அசத்தினர்.

ஆக.,15ல் மக்கள் பார்க்க அனுமதி!

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சியை தமிழக கவர்னர் ரவி துவக்கி வைத்தார். 62 அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுத்துறை மற்றும் தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.இன்றும், நாளையும் இக்கண்காட்சியினை ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் மற்றும் ராணுவப் படையினர் பார்வையிடுகின்றனர். விமான பயிற்சி நிறைவு நாளான ஆகஸ்ட் 15ம் தேதி பொதுமக்கள் பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

P. VENKATESH RAJA
ஆக 13, 2024 16:12

விமான படை வீரர்களுக்கு வாழ்த்துக்கள்


P. VENKATESH RAJA
ஆக 13, 2024 16:10

வானில் பார்பதற்கு அழகாக இருந்தது


மேலும் செய்திகள்







புதிய வீடியோ