உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலை முன்னிட்டு மதுபானம் விற்க கட்டுப்பாடுகள் விதித்தது டாஸ்மாக்

தேர்தலை முன்னிட்டு மதுபானம் விற்க கட்டுப்பாடுகள் விதித்தது டாஸ்மாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 'மதுக்கடைகளில், 50 சதவீதத்திற்கு மேல் இருப்பு இருக்கக்கூடாது' என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, 'டாஸ்மாக்' நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.எனவே, மதுக்கடைகளிலும், மது விற்பனையிலும் முறைகேட்டை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் உத்தரவிட்டு உள்ளது. கடிதம்இதுதொடர்பாக, மதுக்கடை ஊழியர்களுக்கு, மாவட்ட மேலாளர்கள் அனுப்பியுள்ள கடிதம் விபரம்:மதுக்கடைகளில், 50 சதவீதத்திற்கு மேல் மது வகைகள் இருப்பு இருக்க கூடாது. மதுக்கடையின் சராசரி விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 30 சதவீதத்திற்கு அதிகம் இருக்கக்கூடாது. மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது. தினமும் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு ஆய்வு செய்யப்படும். மதுக்கடைகளில் உள்ள, 21 பதிவேடுகளும் தினசரி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இருப்பு பதிவேடு கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும்.மதுக்கடைகளும், அதில் உள்ள மதுக்கூடங்களும் அரசு அனுமதித்த நேரமான மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை மட்டும் இயங்க வேண்டும்.மதுக்கூடங்களில் மதுபானம் இருப்பது கண்டறியப்பட்டால், மதுக்கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விற்கப்படும் மதுபானங்களுக்கு கட்டாயம் ரசீது தர வேண்டும். அடையாள அட்டைபி.ஓ.எஸ்., எனப்படும், விற்பனை முனைய கருவியில் விற்பதை அதிகப்படுத்த வேண்டும். மதுக்கடைகளில், 'டோக்கன்' மற்றும், 'கூப்பன்'களுக்கு கண்டிப்பாக விற்கக்கூடாது.அனுமதியற்ற மதுக்கூடம் செயல்பட்டால், கடை மேற்பார்வையாளர் உடனே, மது விலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார், மாவட்ட மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும்.கடை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிந்து பணிபுரிய வேண்டும்.காலாவதியான மதுபானங்கள் கடைகளில் இருப்பு இருத்தல் கூடாது.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

v. g. krishnan
மார் 19, 2024 03:33

இது எதுவுமே நடக்கபோவதில்லை. முக்கியமாக மது விற்பனைக்கு ரசீது குடுப்பார்களா?


duruvasar
மார் 18, 2024 10:39

மதுக்கடைகளில், 50 சதவீதத்திற்கு மேல் மது வகைகள் இருப்பு இருக்க கூடாது. சரியாக சொன்னீர்கள்.அது குறைய குறைய அந்த அளவை குறையாமல் செய்துவிடலாம். ஆய்வுக்கு வருவதுபோல் சந்தர்ப்பம் ஏற்படின் அது முறையாக அறிவிக்கப்படும். இந்த விதி டாஸ்மாக் கடைகளில் கட்டாயம் அமுல்படுத்தப்படும்.


sankar
மார் 18, 2024 10:35

மதுபிரியர்களை மனம் நோக செய்யாதீர்கள் - முத்துசாமி வருத்தப்படுவார்


Gopalan
மார் 18, 2024 10:10

வசதியாக பிளாக்கில் விற்பனை அதிக விலைக்கு விற்று மக்களை முட்டாள்கள் ஆக்கும் வாய்ப்பு.


Vivekanandan Mahalingam
மார் 18, 2024 09:46

சாராய ஆலய் இருந்து நேராக எல்லா அறிவாலயம் செல்லுமா அல்லது எப்படி செய்ய போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்


Ramesh
மார் 18, 2024 08:36

ETHULA இருந்து என்ன தெரிகிறது கல்விக்கு முன் உரிமை எல்லை என்பதை அரசியல் முழுசாக தெளிப்படுத்துகிறது ...


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 18, 2024 08:21

மீதம் உள்ள 50 சதவிகித சரக்கு பெட்டிகளை திராவை மாடல் கூட்டணி கட்சிகள் அலுவலகங்களில் இறக்கிவிடவும். விநியோகம் செய்ய ஏதுவாக இருக்கும்.


Roy R
மார் 18, 2024 07:30

சிரிப்பு வருது


Palanisamy T
மார் 18, 2024 07:27

கட்டுப்பாடு தேவையில்லை எப்படிப் பார்த்தாலும் மதுவிற்பனை நடந்துக் கொண்டுதானிருக்கும். தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட சிலநாட்களுக்கு ஆவது மதுபானத்தை தடைச் செய்யுங்கள் குற்றச் செயல்களாவது கொஞ்சம் குறையும். அதனருமை அப்போதுதான் மக்களுக்குப் புரியும். மறுத்தால் சம்பந்தப் பட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம்.


Bye Pass
மார் 18, 2024 05:47

கூகுள் பே UPI அல்லது QR முறையில் பணம் வாங்குவது சரியான முறை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை