உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  டெட் தேர்ச்சி விலக்கு பிரதமர் மோடிக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம்

 டெட் தேர்ச்சி விலக்கு பிரதமர் மோடிக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம்

சென்னை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2011ம் ஆண்டு, நவ., 15க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும், 'டெட்' எனும் ஆசிரியர் தகுதி தேர்ச்சி அவசியம் என, கடந்த செப்., 1ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முழுமையான விலக்கு அளித்திருந்த போதிலும், இந்த தீர்ப்பு, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு அபா யத்தை ஏற்படுத்தி உள்ளது . இதனால், நாடு முழுதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை உருவாக்கும். எனவே, 'டெட்' தேர்ச்சி தொடர்பான, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி கட்டாயத்தில் இருந்து, நிரந்தரமாக விலக்கு பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நாடோடி
நவ 27, 2025 07:55

நீங்க டெட் தேர்வு எழுதாம நோகாம பணியில் இருப்பதற்கு கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும்னு பச்சை பொய் சொல்லுறீங்க, நீங்க வீட்டுக்கு போங்க இங்க திறமையான ஆசிரியர்கள் நிறைய இருக்காங்க அவங்கள் டெட் தேர்வு எழுதி பணிக்கு வரட்டும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி