உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஜன.,6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஜன.,6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதி செய்துள்ளனர். இதற்காக, மாநிலம் முழுதும் நேற்று வேலைநிறுத்த ஆயத்த கூட்டங்கள் நடத்தி, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ ஜியோ' சார்பில், வேலைநிறுத்த ஆயத்த கூட்டம், மாவட்ட தலைநகரங்களில் நேற்று நடந்தது. அக்கூட்டங்களில் பங்கேற்ற அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், 'இனி பேச்சு நடத்தப் போவதில்லை. எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், ஜனவரி 6 முதல் வேலைநிறுத்தம் உறுதி' என அறிவித்தனர். அதை மையமாக வைத்து, இக்கூட்டங்களில் மாவட்டவாரியாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wmonxx12&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில், எழிலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, அக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், இளங்கோவன் தலைமை வகித்தனர். பின், சுரேஷ் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது, 2010 ஆகஸ்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, 'டெட்' தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரமாக உள்ளன. இவற்றில் ஒன்றை கூட, முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. பேச்சு நடத்துவது, குழு அமைப்பது, ஆய்வு செய்வது என, நான்கரை ஆண்டுகளை கடத்தி விட்டார். கடந்த சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில், தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்க, தி.மு.க., குழு அமைத்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே, எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். அறிவித்தபடி, ஜனவரி 6ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்க உள்ளோம். இனி அமைச்சர்களுடன் பேச்சுக்கு இடமில்லை. தேர்தலில் எங்களது ஆதரவு வேண்டுமானால், முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரசாணை வெளியிட வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓட்டுகளை, அவர் இழக்க மாட்டார் என, நம்புகிறோம். இல்லையென்றால், வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

நாளை ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் மற்றொரு கூட்டமைப்பான, 'போட்டோ ஜியோ' சார்பில், வரும் 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதையொட்டி நாளை, கலெக்டர் அலுவலகம் முன், கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. 'வேலைநிறுத்தம் நடந்தால் அரசுக்கு பிரச்னைகள் எழும்' ''அரசு ஊழியர்களின் பிரச்னைக்கு பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்,'' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் அவர் அளித்த பேட்டி: தேர்தல் நேரத்தில் வேலைநிறுத்தம் நடந்தால் சில பிரச்னைகள் எழும். இதை சமாளிப்பதும், எதிர்கொள்வதும், பேச்சு நடத்துவதும் அரசின் கடமை. சில கோரிக்கைகள் கடைசி நேரத்தில் வலியுறுத்தப்பட்டாலும், அரசு அவற்றுக்கு பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் . மகளிர் உரிமைத் தொகையால், அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். ஆனால், அதனால் ஏராளமான பலன்கள் உள்ளன. பொருளாதார நிபுணர்கள், இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில் அமைச்சர் களுடன் நடந்த பேச்சில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், ஜனவரி 6 முதல் பணிக்கு போக மாட்டோம். - ஆறுமுகம், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜன., 6ல் துவங்கும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தின்போது, போராட்டத்தை வழிநடத்தும் நிர்வாகிகள் கைதானால், உறுப்பினர்கள் கலைந்து செல்ல நேரிடும். எனவே, நிர்வாகிகள் கைதாகாமல், சமீபத்தில் செவிலியர்கள் நடத்திய போராட்டத்தைபோல், நாம் வலுவுடன் தொடர் போராட்டம் நடத்த வேண்டும். - ராமநாதபுரம் மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பெரிய ராசு
டிச 28, 2025 11:36

பொழுது விடிய விடமாட்டேங்கறாங்க உடன்பிறப்பையே, துண்டுசீட்டை காணோம் , நான் என்ன பண்ணுவேன் ..


VENKATASUBRAMANIAN
டிச 28, 2025 08:12

ஏமாற்றுவதை ஏ திமுகவின் கொள்கை. ஓட்டு போட்டுவிட்டு இப்போது வேலை நிறுத்தம் செய்தால் மறுபடியும் ஏமாற்றி ஓட்டு வாங்குவார்கள். புரிந்து கொண்டால் சரி


Rajarajan
டிச 28, 2025 07:54

எப்போது கழகங்கள் உருவானதோ, அப்போதே அரசு ஊழியரின் கலகங்கள் உருவானது. அரசியல் கட்சிகளின் பலவீனம் வோட்டு என்பதும், அது அரசு ஊழியர்களின் பலமும் ஆனதால் வந்த வினை. எவ்வளவு தான் கொட்டி கொட்டி கொடுத்தாலும், மனிதனின் மனம் திருப்தி அடையாது. தனியார் / ஏழை பாழைகள் / அன்றாடம் காய்ச்சிகள் நாட்டு வளர்ச்சிக்கு செலுத்தும் வரிப்பணம், இப்படி சுயநலத்துக்காக அரசு ஊழியருக்கு வாரி வாரி கொடுத்து, மேலும் மேலும் வரிசுமை மற்றும் விலைவாசி சுமையை, அவர்கள் மேல் ஏற்றுவது, ஏழேழு ஜென்மத்துக்கும் அவர்களின் சாபத்தை இவர்கள் சுமப்பர். அதுசரி, இவர்கள் மட்டும் மிக குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளிகளிடம், தங்கள் வாரிசுகளை சேர்ப்பது ஏன் ?? நாசமாய் போக.


Palanisamy Sekar
டிச 28, 2025 07:41

இந்த ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் இதுவரை காணாத எங்கு பார்த்தாலும் போராட்டம் கைது படலமும் அழுகையும் புலம்பலுமாக ஸ்டாலின் ஆட்சியின் இறுதி நாட்கள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்காக வைத்திருக்கும் பணத்தை வெளியே எடுத்தால் இந்த போராட்டங்கள் எதுவுமே நடக்காது என்கிறார்கள். ஆனால் அதன் பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்க எங்கே போவது என்கிறார்கள். ஆட்சியின் லட்சணம் சந்திசிரிக்கின்றது. போக்குவரத்துக்கு ஊழியர்களின் போராட்டம் ஸ்டாலின் ஆட்சியின் ஆரம்பத்திலிருந்தே இருந்தாலும் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கின்றார். ஆனால் எதிர்க்கட்சியாக இருந்தபோது பொய்யன் வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு இப்பொது கைது செய்வதும் மிரட்டுவதும் என்று சர்வாதிகாரி பாணியில் ஸ்டாலின் செயல்பட நினைப்பது அவருக்கு எதிரான மக்களின் மனதில் கோபக்கனலாகவே மாறிவிட்டது. தோற்பது என்பது தேர்தலில் திமுக மிகப்பலத்தை அடியை இந்த முறை சந்திக்கபோகிறது. மாநிலமெங்கும் ஸ்டாலினின் எதிர்ப்பு அலையை காணமுடிகின்றது. மாநிலத்தின் கஜானா காலி.. திவாலாகப்போவது தமிழகம் என்கிற உண்மையை மக்கள் விரைவிலே உணரப்போகிறார்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை