உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு காலை அறிவிப்பு; மதியம் வாபஸ்

 ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு காலை அறிவிப்பு; மதியம் வாபஸ்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று காலை சிறப்பு 'டெட்' தேர்வு தேதியை அறிவித்த நிலையில், மதியம் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெறாதோர், இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், லட்சக்கணக்கான நபர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல், ஆசிரியர் களாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு, வாய்ப்பளிக்கும் வகையில், 2026 ஜனவரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில், சிறப்பு 'டெட்' தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. நேற்று காலை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதில், அடுத்த ஆண்டு ஜன., 24ம் தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் முதல் தாள், 25ம் தேதி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் இரண்டாம் தாள் தேர்வு நடக்கும். அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம், அந்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், தன் இணையதளத்தில் இருந்து நீக்கியது. இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'அறிவிப்பில் சில தவறுகள் உள்ளன. அவை களையப்பட்டு, விரைவில் புதிய அறிவிப்பு வெளியிடப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ