தஞ்சாவூரில் பயங்கரம்: அரசு பள்ளி ஆசிரியை கொலை
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அரசு தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த காவியா வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில், மேலக்களகுடியை சேர்ந்த காவியா, 26, ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார், 29, என்பவர் காதலித்துள்ளார். ஆனால் காவியாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையறிந்த, அஜித் குமார் இன்று காவியா பள்ளிக்கு செல்லும் போது கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.