உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தே.மு.தி.க., இருக்கும் கூட்டணிக்கே வெற்றி

தே.மு.தி.க., இருக்கும் கூட்டணிக்கே வெற்றி

தமிழகம் முழுதும், 'இல்லம் தேடி உள்ளம் நாடி' என்ற பெயரில், இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் செய்கிறோம். தே.மு.தி.க., எந்த கூட்டணியில் இருக்கிறதோ, அந்த கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும். நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை, வரும் ஜன., 9ல் கடலுாரில் நடக்கும் மாநாட்டில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அறிவிப்பார். தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்துக்கும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கும் நல்ல நட்பு உண்டு. விஜயை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவரது சினிமா நிகழ்ச்சிகள் பலவற்றுக்கும் சென்றுள்ளேன். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை. விஜயகாந்தின் ரசிகர்கள், இதை புரிந்து நடந்து கொள்வர். - -விஜய பிரபாகரன், இளைஞரணி செயலர், தே.மு.தி.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ