உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரியில்லா ஒப்பந்தத்தின் பலன் ஆடைகள் ஏற்றுமதி அதிகரிப்பு

வரியில்லா ஒப்பந்தத்தின் பலன் ஆடைகள் ஏற்றுமதி அதிகரிப்பு

திருப்பூர்:வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுடனான, இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.இந்தியாவுடன், வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட, ஒன்பது நாடுகள் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்து உள்ளன. போர் சூழல் காரணமாக, உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, வளர்ந்த நாடுகளும் சிக்கன நடவடிக்கையில் இறங்கின. இதனால், கடந்தாண்டு ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தது.தற்போது நிலைமை சீராகி வருவதால், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுடனான ஏற்றுமதி வர்த்தகம் மீண்டும் அதிகரித்துள்ளதாக, ஏ.இ.பி.சி., தரவுகள் தெரிவிக்கின்றன.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆயத்த ஆடை ஏற்றுமதி, 6,315 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு 3,790 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறுகையில், 'வரியில்லா ஒப்பந்தம் ஏற்படுத்தும் போது, வரி செலவினம் குறைவதால், வர்த்தகம் அதிகரிக்கிறது.'ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளில், எட்டு நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத கால ஏற்றுமதி, 7.10 சதவீதம் அதிகரித்துள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை