உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., கோரிக்கையை ஏற்று ரயில்கள் நின்று செல்ல உத்தரவு

பா.ஜ., கோரிக்கையை ஏற்று ரயில்கள் நின்று செல்ல உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கவும், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், சென்னையில் நேற்று முன்தினம் மனு அளித்தார். அம்மனுவை அருகில் இருந்த அதிகாரிகளிடம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.இதையடுத்து, கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில், இனி உளுந்துார்பேட்டையிலும்; திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் குத்தாலத்திலும் நின்று செல்லும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ரயில்கள் நின்று செல்லும் தேதியை தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, உளுந்துார்பேட்டை, குத்தாலம் மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ