உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தை!

அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தை!

சென்னை: சென்னையில் திருமுல்லைவாயல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தையை மக்கள் மீட்கும் வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் 4வது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்தது. தவறி விழுந்து தகர சீட்டில் கிடந்த குழந்தையை காப்பாற்ற மக்கள் பல்வேறு முயற்சி எடுத்தனர். குடியிருப்பு வாசிகள் போர்வையை விரித்து, குழந்தை தரையில் விழுவது தவிர்க்க முயற்சி செய்தனர். பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு, குழந்தையை மீட்கும் வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட போராட்டத்திற்கு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஏப் 28, 2024 20:25

பச்சிளம் குழந்தையை தனியாக விட்டு வீட்டில் இருக்கும் பெரிசுகள் பாக்கியலஷ்மி சீரியல் பார்ப்பதில் முழுகி போயிருந்திருப்பார்கள்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ