உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடநெருக்கடியால் வராண்டாவில் நடக்கும் வகுப்பறை!

இடநெருக்கடியால் வராண்டாவில் நடக்கும் வகுப்பறை!

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆர்.கோபாலபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த, 2021ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.பள்ளி தரம் உயர்த்தினாலும், கட்டட வசதியில்லை. பள்ளியின் மொத்த பரப்பு, 25 சென்ட் ஆகும். இங்கு, 20 குழந்தைகளுடன் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இரண்டு கட்டடங்களில் ஐந்து வகுப்பறையுடன் செயல்படும் தொடக்கப்பள்ளியில், 119 மாணவர்கள் படிக்கின்றனர்.இதே பள்ளி வளாகத்தில் தனி கட்டட வசதியில்லாததால் உயர்நிலைப் பள்ளி, இரண்டு கட்டடங்களில் உள்ள, மூன்று வகுப்பறைகளில் செயல்படுகிறது. இதில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, 175 மாணவர்கள் படிக்கின்றனர்.மூன்று வகுப்பறைகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வகுப்பறையும், ஒன்பதாம் வகுப்பு, தலைமையாசிரியர், அலுவலக அறையும், 8ம் வகுப்பு மற்றும் ஆசிரியர் அறையுடன் ஒரு வகுப்பறை உள்ளன. ஆறு மற்றும், ஏழாம் வகுப்புக்கு வராண்டாவில் வகுப்புகள் செயல்படுகின்றன.

தொடரும் அவலம்

!பள்ளி வராண்டாவில், வெயில் நேரத்தில் மரத்தடி நிழலிலும், மாலை நேரத்தில் தண்ணீர் தொட்டி அருகே மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால், மழை அவ்வப்போது பெய்கிறது. இதனால், மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக, வகுப்பறை முன் உள்ள வராண்டாவில் தார்ப்பாய் கட்டப்பட்டுள்ளது.ஒருவரையொருவர் ஒட்டி அமர வைத்தும், ஒரு பாடம் நடத்தும் போது, மற்ற வகுப்பறை மாணவர்களை, பள்ளி வளாகத்தில் அமர வைக்கும் அவல நிலை நீடிக்கிறது. தற்போது மழை காலத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர். கடந்த, மூன்று ஆண்டாக தொடரும் இந்த அவல நிலைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இடம் கிடைக்கலை!

அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின், அதற்கான வகுப்பறை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு செய்த போது, அரசுக்கு சொந்தமான நிலமே, ராமபட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலபுரத்தில் இல்லை.தற்போதுள்ள வகுப்பறை கட்டடத்தின் மீது, மற்றொரு கட்டடம் கட்டலாம் என்றால், தற்போதுள்ள கட்டடம், அந்த அளவுக்கு வலுவானதாக இல்லை என கூறப்படுகிறது.நெருக்கடியான இடத்தில், இரண்டு குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளதால், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட இடவசதியில்லை. 'நபார்டு' திட்டத்தில் கட்டடம் கட்டலாம் என்றால் அதற்கான இடம் தர யாரும் முன்வரவில்லை. அரசும், கட்டடம் கட்டுவதற்கான திட்டத்துக்கு மாற்று ஏற்பாடு குறித்து சிந்திக்க கூட இல்லை. இதனால், மாணவர்களின் நிலை திண்டாட்டமாக உள்ளது.

வேதனை

கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது:தமிழகம் - கேரளா எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் வசிப்போரின், ஒரே கல்வி ஆதாரமாக, இந்த உயர்நிலைப் பள்ளி உள்ளது. தொடக்கப்பள்ளி அளவுக்கு, உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ளது. ஆனால், இடப்பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண ஏன் அக்கறை காட்டவில்லை. ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு நிலம் இல்லாத சூழலில், இப்பள்ளிக்கு என நிலம் வாங்கி, வகுப்பறை கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கழிப்பறையிலும் பிரச்னை தான்!

ஆண்கள், பெண்கள் என நான்கு கழிப்பறைகள் உள்ளன. இட நெருக்கடியுடன் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவியர் - மாணவர்கள் கழிப்பறை எதிர் எதிரே கட்டப்பட்டுள்ளது. இதனால், மாணவியர் கழிப்பறை செல்வதை தவிர்க்கும் அவல நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Narayanan
ஜூலை 29, 2024 13:19

கல்விக்கூடங்களின் நிலை அறிந்து அதற்கு சிலவு செய்யலாமே ? நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதிலும் தமிழ்நாடு முன்னிலை மாநிலமா ?


Premanathan Sambandam
ஜூலை 29, 2024 11:52

பாராளுமன்றம் புதிதாக கட்ட பணம் இருக்கிறது மனம் இருக்கிறது சாதாரண மக்களை திரும்பி பார்க்க தேர்தல் நேரத்தில் மட்டுமே முடியும் வாழ்க ஜனநாயகம்


Narayanan
ஜூலை 29, 2024 13:26

எங்கே நீங்க பாராளுமன்ற கட்டடத்திற்கு போறீங்க? அது மத்திய அரசு வேலை. இது நம்ம மாநிலத்து பள்ளிக்கூடம்.தமிழக அரசின் வேலை. மரீனா சுடுகாடு ஒரு நாற்பது கோடி, கார் ரேஸ் பெயரில் நாற்பதுகோடி என்று தண்டத்திற்கு கொட்டி அழுத நமது அரசை சொல்லுங்கள் .


Krishnamoorthy
ஜூலை 29, 2024 11:44

இந்த போட்டோ வை பிரிண்ட் செய்து ரோடு சைடு இல் Flex வைத்தால் அனைவரின் கவனத்திற்கு வரும். வேறு வழி இல்லை. ஒன்று govt நடவடிக்கை எடுக்கும் அல்லது தனியார் நிறுவனங்கள் உதவும்.


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 10:25

எல்லாப் பள்ளிகளிலும் ஒரு மணி நேர வகுப்பையாவது திறந்த வெளி வெயிலில் நடத்தினால் மாணவர்களின் உடலில் விட்டமின் டி அளவு அதிகரிக்கும். ஆகவே இந்த நல்ல திட்டத்தை எதிர்க்க வேண்டாம்.


Raa
ஜூலை 29, 2024 11:06

நீங்கள் எப்படி, ஒரு மணி நேரம் திறந்த வெளியில் அலுவலக வேலை செய்ய ரெடியா? உங்கள் குழந்தைகளை திறந்த வெளி பள்ளியில் ஒருமணிநேரம் உட்கார வைக்க ரெடி என்றால், நீங்கள் சொல்வதை ஏற்கலாம்.


Narayanan
ஜூலை 29, 2024 13:21

அதற்குத்தான் விளையாட்டு வகுப்பு இருக்கிறது. அது நடக்கிறதா என்பதுதான் கேள்வி .


A
ஜூலை 29, 2024 10:10

VIDIYAL MODEL MORDEN NATURAL CLASS ROOM.. COME ON UPPIS MUTTU KODUNGA


RAAJ68
ஜூலை 29, 2024 09:34

கார் ரேஸ் சாலை போடுவதற்கு 40 கோடிகள் தண்டச் செலவு ஆனால் அரசு பள்ளிக்கூடங்களின் நிலைமையோ பரிதாபம். காமராஜர் போன்று ஒருவர் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் ஆனால் நல்லவர்கள் ஆட்சி செய்வதற்கான வாய்ப்பு இல்லை


Mohan
ஜூலை 29, 2024 10:58

எங்களுக்கு அதெல்லாம் தேவையே இல்ல இருக்கவே இருக்கு கோட்டர், கோழி பிரியாணி, இலவசம், இருநூறு அடித்து போதும் காலத்துக்கும் நாங்கள் அடிமைகள் இப்படிக்கு டுமிழக மக்கள் ..இல்லாமலா நாங்க 40/40 குடுத்தோ,


RAAJ68
ஜூலை 29, 2024 09:33

தினமும் கனிம வளம் மணல் கொள்ளை என்று கோடிகளில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள் கோடி ரூபாய் செலவழித்து சிலைகள் வைக்கிறார்கள் நூலகங்கள் கட்டுகிறார்கள் ஆனால் மாணவர்கள் படிப்பதற்கு வகுப்பறை இல்லை ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை ஆனால் எந்த அரசு வந்தாலும் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை அவரவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒரே கொள்கை தான் இரண்டு கழகங்களுக்கும்.


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 09:32

பள்ளி இருக்குமிடத்தின் பெயர் கோபாலபுரமாம்.


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 09:25

எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியை ஆரிய வந்தேறிகள் குறை கூறுகின்றனர். 2000 ஆண்டுகளாக படிக்க விடப்படாத இனம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கூட படிக்கக் கூடாது என்பது அவர்களின் எண்ணம். இயற்கையான சூரிய ஒளியில் கல்வி கற்பதால் சன் சைன் என்று பெயரிடலாம்.


Kumar Kumzi
ஜூலை 29, 2024 08:46

விடியாத விடியலின் சோகங்கள் ஓவாவுக்கு ஒட்டு போட்டுட்டு நல்லா அனுபவிங்க


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை