உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தற்சார்பு பாரதம் கனவு நிறைவேறும் நாள் வெகுதுாரமில்லை: நயினார் நாகேந்திரன்

 தற்சார்பு பாரதம் கனவு நிறைவேறும் நாள் வெகுதுாரமில்லை: நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை அறிக்கை: கடந்த 75 ஆண்டு கால, பழைய 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, தற்போதைய உலகளாவிய நடைமுறைக்கு ஏற்ப, நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய தொழிலாளர் நலச்சட்டங்களின் முக்கிய அம்சங்கள் விபரம்: l அனைத்து ஊழியர்களுக்கும், குறைந்தபட்ச ஊதியம் l வேலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நியமனக் கடிதம் வழங்குவது கட்டாயம் l தொழிலாளர்கள், 40 வயது கடந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் இலவச உடல் நலப் பரிசோதனை l கூடுதல் நேர வேலைக்கு, இரு மடங்கு ஊதியம் l பணிக்கொடை பெறுவதற்கான தகுதிக்காலம், 5 ஆண்டிலிருந்து ஓராண்டாக குறைப்பு. இப்படி புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க, மிகப்பெரிய சீர்திருத்தம் என்பதில், எந்த சந்தேகமுமில்லை. உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் நலனை மேம்படுத்துவதோடு, இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், தற்சார்பு பாரதக் கனவு நிறைவேறும் நாள் வெகுதுாரமில்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை