உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வசூல் ராஜா மின் அதிகாரிகள் வசமாக சிக்கினர்; போர்மேன் ரூ.ஆயிரம்; அதிகாரிக்கு ரூ.3 ஆயிரம்!

வசூல் ராஜா மின் அதிகாரிகள் வசமாக சிக்கினர்; போர்மேன் ரூ.ஆயிரம்; அதிகாரிக்கு ரூ.3 ஆயிரம்!

சேலம்: சேலத்தில் லஞ்சம் வாங்கிய மின் அலுவலக வணிக ஆய்வாளர், போர்மேன் கைது செய்யப்பட்டனர்.சேலம் மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளராக மணி பணியாற்றி வந்தார். இவர் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றுள்ளார். புகார் படி, ரூ.3000 லஞ்சம் வாங்கிய மல்லமூப்பம்பட்டி மின் அலுவலக வணிக ஆய்வாளர் மணி என்பவர் கைதாகினார். ரூ.1,000 லஞ்சம் பெற்ற போர்மேன் ராதாகிருஷ்ணன் என்பவரையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். இது குறித்து இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V RAMASWAMY
நவ 21, 2024 19:26

கோடி கோடியாக மக்கள் பணத்தை விழுங்குபவர்களை என்ன செய்வது?


Jay
நவ 21, 2024 18:56

லஞ்சம் ஊழல் இல்லாமல் அரசு அலுவலகங்கள் இல்லை. ஆனால். இந்த மாதிரி லஞ்சம் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள், திமுகவின் ஐடியாலஜிக்கு அடங்காமல் இருந்தவர்கள் தான். எங்காவது ஒரு இடத்தில் அதிமுக பற்றியோ பிஜேபி பற்றியோ ,மோடி பற்றியோ பெருமையாக பேசிவிட்டால் இந்த நிலை தான் வரும்.


Indian
நவ 21, 2024 18:36

லஞ்சத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் ....


M.Sakthivel
நவ 21, 2024 17:11

Please Tel me Complaint Mobile Number,,


Ramesh Sargam
நவ 21, 2024 14:21

நேற்று ஒரே கொலை செய்தி. ஆசிரியை குத்தி கொலை. ஓசூரில் வழக்கறிஞர் குத்தி கொலை. இன்று வசூல் ராஜாக்களின் கதை. தமிழகத்தில் கொலை அதிகம். ஊழல் அதிகம். திமுக அரசு உடனே கலைக்கப்படவேண்டும். சிறிதுகாலம், அதாவது சட்டம் ஒழுங்கு ஒழுங்கான நிலைக்கு வரும்வரையில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்.


சம்பா
நவ 21, 2024 14:12

இதெல்லாம் ஒரு தொகையா?


Sekar Times
நவ 21, 2024 14:04

It is a tip of the ice berg.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை