உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போர்ஷனில் இல்லாத கேள்வியால் பதிலளிக்க தலையை சொறிந்த எம்.பி.,

போர்ஷனில் இல்லாத கேள்வியால் பதிலளிக்க தலையை சொறிந்த எம்.பி.,

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கல்யாணசுந்தரம், கும்பகோணம் பாலக்கரையில் உள்ள அவரது அலுவலகத்தில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தார். அரசியல் ரீதியில் நிறைய கேள்விகள் கேட்டு, எம்.பி.,யை தினறடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, எம்.பி., அலுவலகத்துக்கு பத்திரிகையாளர்கள் சென்றனர். அங்கு சென்றதும், ஒவ்வொருக்கும் எம்.பி.,யின் உதவியாளர் ஒரு துண்டு சீட்டைக் கொடுத்தார். அதில், நான்கு கேள்விகள் அச்சிடப்பட்டிருந்தன. அந்த நான்கு கேள்விகளை மட்டும் தான் எம்.பி.,யிடம் கேட்க்க வேண்டும் என எம்.பி.,யின் உதவியாளர் பத்திரிகையாளர்களை கேட்டுக் கொண்டார். 'கவர்னருக்கு எதிரினா உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சொல்லுங்கள். தமிழக கவர்னரின் அடாவடி போக்கு குறித்து உங்கள் எண்ணம் என்ன? மும்மொழி கொள்கையை தி.மு.க., ஏற்காததன் காரணம் என்ன? கவர்னர் நிறுத்திய 10 மசோதாக்களை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளதே...' என, துண்டுச் சீட்டில் இருந்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க எம்.பி., தயாராக இருந்தார். ஆனால், அந்த கேள்விகளை கேட்க பத்திரிகையாளர்கள் யோசிக்க, ஆளும்கட்சி டி.வி., செய்தியாளர் மட்டும் கேள்விகளைக் கேட்க, அதற்கு எழுதி எடுத்து வந்த பதிலைப் படித்தார் எம்.பி., அவ்வளோதான் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தது என சொல்லி விட்டு, எம்.பி., அங்கிருந்து கிளம்ப, மறித்த பத்திரிகையாளர்கள் சிலர், வரும் 2028ல் கும்பகோணத்தில் மகாமக விழா நடக்கவுள்ளது. அதற்காக மத்திய அரசிடம் உதவி கேட்டு ஏதும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதா? என, துண்டு சீட்டில் இடம் பெறாத கேள்விகளைக் கேட்டனர். அதனால் தலையைச் சொறிந்த எம்.பி., சமாளித்து ஏதோ பதில் சொல்லிவிட்டு, ''பத்திரிகையாளர்கள் தவறான செய்தி போடக்கூடாது. நீங்களாக கேட்ட கேள்விகளுக்கான பதிலை செய்தியாகப் போட வேண்டாம்,'' என, சொல்லி விட்டு, பத்திரிகையாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sasidharan
ஏப் 11, 2025 12:50

நம்பி ஒட்டு போட்ட மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் . எல்லாம் தலையெழுத்து


Abdul kasim
ஏப் 11, 2025 11:54

அவரே கேள்வி கேட்டு அவரே பதிலளிக்கிறார் என்ற செய்தியை வரும் தாங்கள் சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது


Bharathi
ஏப் 11, 2025 11:15

இவருக்கு ட்ரெயினிங் பத்து. சரியான பதில் தெரியலனா, பாசிசம், மதவாதம் ஜாதி கார்பொரேட் அப்படி இப்படின்னு எதையாவது உருட்டி விட்டுட்டு போக தெரியல


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 11, 2025 10:53

தமிழ்நாட்டில் முன்பு ஒருவர் இருந்தார். அவரை வள்ளுவர் தொல்காப்பியர் என்றெல்லாம் அழைப்பார்கள். தினசரி காலை செய்தித்தாள்களில் பத்திரிக்கை நிருபர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்ததைப்போல செய்தி வெளியாகும். உண்மையில் அவரே கேள்வியையும் அவரே பதிலையும் எழுதிக்கொடுத்துவிடுவார்


Venkatesh Sagadevan
ஏப் 11, 2025 10:45

தற்குறி....


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஏப் 11, 2025 06:30

ஹா... ஹா...


Mani . V
ஏப் 11, 2025 05:08

இதெல்லாம் ஒரு பிழைப்பு. தலைமை முதல் அடிமட்டம் வரை எல்லாமே துண்டு சீட்டுதான்.


Yes your honor
ஏப் 11, 2025 11:22

துண்டுச் சீட்டு மட்டுமல்ல வெட்டி உருட்டலும், ஃபிராடுத்தனமும் தான்.


முக்கிய வீடியோ