உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாபர் வழக்கை விசாரித்தவர் என்.சி.பி.,யில் இருந்து நீக்கம்

ஜாபர் வழக்கை விசாரித்தவர் என்.சி.பி.,யில் இருந்து நீக்கம்

சென்னை:ஜாபர் சாதிக் தொடர்புடைய, போதைப் பொருள் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த, என்.சி.பி., தலைமை துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங், அப்பொறுப்பில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளார்.சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்த, சென்னையைச் சேர்ந்த, முன்னாள் தி.மு.க., நிர்வாகி ஜாபர் சாதிக், கடந்த மார்ச் 9ல், என்.சி.பி., எனப்படும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், டில்லியில் கைது செய்யப்பட்டார்.இதுதொடர்பாக, டில்லியில் ஐ.பி.எஸ்., அதிகாரியான, என்.சி.பி., துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர், ஜாபர் சாதிக் விவகாரத்தில், அரசியல் உள்நோக்கத்துடன், பரபரப்பு மற்றும் புகழுக்காக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நிறைய தகவல்களை மறைத்து விட்டதாகவும் கூறப்பட்டது.ஜாபர் சாதிக் மீதான வழக்கு விசாரணையிலும், சரியான நடைமுறைகளை பின்பற்றவில்லை என, அவர் மீது சந்தேக பார்வையும் விழுந்தது. இது தொடர்பாக, அவர் மீது, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் என்.சி.பி., தலைமை இயக்கனரிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஞானேஸ்வர் சிங் செயல்பாடுகள் மற்றும் வழக்கை அவர் விசாரித்த விதம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, என்.சி.பி., மேற்கு மண்டல தலைமை துணை இயக்குனர் மணீஷ்குமாருக்கு உத்தரவிடப்பட்டது. அதையடுத்து, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த விஜிலன்ஸ் பொறுப்பில் இருந்து ஞானேஸ்வர் சிங் நீக்கப்பட்டார். தற்போது அவரை, மத்திய உள்துறை அமைச்சகம், என்.சி.பி.,யில் இருந்து திரும்ப பெற்றுள்ளது. அவருக்கு புதிய பொறுப்பும் வழங்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
டிச 25, 2024 12:12

இந்த வழக்கு முறையாக விசாரிக்க்கப்பட வாய்ப்பில்லை .... துக்ளக்காரும், அவரது வாரிசும் சிறை செல்வார்கள் என்று கூடப் பிரச்சாரம் செய்து வந்தது தமிழக பாஜக ..... முறையாக, நேர்மையாக, தொடர்ந்து விசாரிக்கப்பட்டிருந்தால் அது இந்த ஆண்டு முடிவதற்குள் நடந்திருக்கலாம் .... பாஜக தேசபக்தி வேடம் போடும் கட்சி என்று உறுதிப்பட்டுவிட்டது ...


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 25, 2024 11:39

என்.சி.பி., தலைமை துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங் அவர்களின் மற்றும் அவரது உறவினர்களின் அசையும் மற்றும் ஆசையா சொத்து விபரங்களையும் அவை சேர்ந்த காலத்தையும் அரசு விசாரிக்க வேண்டும்.


Anantharaman Srinivasan
டிச 25, 2024 11:32

திரும்பவும் முதலிலிருந்து...


Dharmavaan
டிச 25, 2024 09:27

புகார் அளித்தது யார் தெரியவில்லை சுடாலின் என்றால் சந்தேகம்தான்


Mani . V
டிச 25, 2024 03:29

தமிழ்நாட்டுக்கு வந்து நேர்மையாகப் பணியாற்றி விட்டுப் அவர் பாதுகாப்பாக திரும்ப முடியுமா? அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு உயிருடன் வேண்டுமல்லவா. அவருக்கு தமிழகத்தின் முந்தய வரலாறுகள் தெரியுமல்லவா?


enkeyem
டிச 25, 2024 11:52

மிஸ்டர் மணி. அந்த அதிகாரி இங்குள்ள கேடுகளுக்கு பயந்து அவராகவே பணி மாறுதல் கோரி திரும்பிச் செல்லவில்லை. அவரது நடவடிக்கைகளில் காணப்பட்ட சில தகாத நடவடிக்கைகளால் அவரை திரும்ப பெற்றுள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை