உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களின் பேரன்போடு அரசியல் பயணம்: விஜய்

மக்களின் பேரன்போடு அரசியல் பயணம்: விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசியல் கட்சி துவங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும், நடிகருமான விஜய் நன்றி தெரிவித்து உள்ளார்.நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கி விட்டார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் தன் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; 2026 சட்டசபை தேர்தலில் ஜெயித்து, தமிழகத்தில் ஆட்சி அமைப்பதே இலக்கு என்று விஜய் அறிவித்துள்ளார். விஜய் கட்சி துவங்கியதற்காக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=25lcc4tx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அரசியல் பயணம்

இந்நிலையில், இன்று(பிப்.,04) விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். தமிழக மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறை நண்பர்கள், தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், 'என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்' அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

தாமரை மலர்கிறது
பிப் 05, 2024 03:57

விஜய் கட்சி ஆரம்பித்தது உதயநிதியை பார்த்து தான். உதயநிதி சினிமாவில் ஐம்பது கோடி ரூபாய் கூட சம்பாதிக்க வக்கில்லாத ஒரு ஹீரோ அரசியலில் முப்பதாயிரம் கோடி ரூபாய் சம்பாரித்துவிட்டார். சீமான் படம் இயக்கி நயா பைசா சம்பாரிக்க வக்கில்லாமல் வறுமையில் வாண்டார். இன்று அரசியலால் ஆயிரம் கோடிகளில் புரள்கிறார். சீமானின் தம்பிகள் சீமான் அதிபர் ஆகிவிடுவார் என்று உண்மையில் நம்புகிறார்கள். அதிபர் என்ற பதவி தமிழகத்தில் கிடையாது என்று இதுவரை அவர்களுக்கு புரியவில்லை. அவர்களின் அரசியல் அறிவு அவ்வளவு பெரிது. அரசியலில் முதலீடு வெறும் வாய் மற்றும் பொய் மட்டுமே. அதனால் விஜய்யும் அரசியலில் இறங்கி முத்தெடுக்க முயல்கிறார். ஜோசெபும் சைமனும் சேர்ந்தால், திமுகவின் மைனாரிட்டி வோட்டுகளுக்கு ஆப்பு.


K.Ramakrishnan
பிப் 04, 2024 23:37

நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" வார்த்தை ஜாலம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பனையூரில் உள்ள பெரிய கேட் போட்ட இவரது வீட்டு வாசலில் காத்து நிற்கும் அந்த தோழர்கள் குடிப்பதற்கு ஒருபானை தண்ணீர் கூட வைக்கவில்லை என்று ஒரு ஆட்டோக்காரர் வெ ளியிட்ட வீடியோ பார்த்த பிறகு...இந்த வர்ணனை எல்லாம் பொய்யா... என்றே நினைக்கத் தோன்றுகிறது..


PRAKASH.P
பிப் 04, 2024 19:37

Totally thinking that he can become a CM. He should support either BJP or NTK or both to close Dravida Looters from TN.


ராமகிருஷ்ணன்
பிப் 04, 2024 19:24

பேரன்பு எல்லாம் ஓட்டா மாறாதுப்பா. ஆழம் தெரியாமல் காலை வுடாதே.


Godyes
பிப் 04, 2024 19:18

சினிமாவில் சின்ன பசங்க மாதிரி கைய கால ஆட்டி நீண்ட வசனம் எதுவும் இல்லாது வெறும் ஆக்ஷன் கொடுத்தால் எவனும் ஓட்டு போட மாட்டான் .


VENKATASUBRAMANIAN
பிப் 04, 2024 19:09

பாவம் இவர் தவறானது வழிகாட்டுதலால் கட்சி ஆரம்பித்துள்ளார்.


Rajarajan
பிப் 04, 2024 17:49

அரசியலை விடுங்க. அதுக்கு தகுதி எல்லாம் வேண்டவே வேண்டாம். யாரு வேண்டுமானாலும் வரலாம். ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், அட்மினிஸ்டரேஷன் தெரியணும். அது சம்பந்தமா, உங்க கிட்ட நேரலையில் பொருளாதார நிபுணர்கள் கேள்வி கேட்டா, பதில் சொல்ல தயாரா


HoneyBee
பிப் 04, 2024 17:33

பிகிலு கப்பு பூடப்போவுது. சூதகமா இருந்துக்கோங்க


Sakthi Parthasarathy
பிப் 04, 2024 17:10

வாழ்த்துக்கள் விஜய். புதிய திட்டங்களோடு ஏதேனும் ஒன்று இரண்டு மக்கள் தேவைகளுக்கு உங்கள் தீர்வை தெளிவான திட்டத்தோடு விளக்குங்கள் ..மக்கள் பார்வை உங்கள் பக்கம் திரும்பும்


J.V. Iyer
பிப் 04, 2024 17:03

நீங்கள் நன்றாக நடிப்பீர்கள். எப்படி நன்றாக ஆட்சி செய்வீர்கள்?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை