உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 3 பேர் கைது: வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 3 பேர் கைது: வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

சென்னை: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்று(ஜூலை 07) காலை விசாரணைக்கு வருகிறது..கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.நேற்று இரவு 6 பேர் கொண்ட மர்மநபர்களால் ஆம்ஸ்ட்ராங், வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிந்து 8 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய கோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டது.உரிய அனுமதி தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதை எதிர்த்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக இன்று இரவே விசாரணைக்கு ஏற்க கோரப்பட்டது. . நீதிபதி அனிதா சுமந்த், நாளை (ஜூலை 07) காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்துவதாக அறிவித்தார்.

உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு

இதனிடையே படுகொலை செய்ய்பபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல் எம்பாமிங் செய்யபபட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து வேன் மூலம் அயனாவரத்தில் உள்ள இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் மூன்று பேர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் புளியந்தோப்பை சேர்ந்த கோகுல் விஜய் சக்தி என்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்து உள்ளது. பெரம்பூர் அரசு பள்ளி மைதானத்த்திற்கு உடல் கொண்டு செல்லப்பபடும் எனவும பந்தர் கார்டன் அரசு மேல் நிலை பள்ளியில் பொதுமக்களின்அஞ்சலி்க்காக உடல் வைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

8 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

ஆம்ஸ்ட்ராங்கொலை வழக்கில் இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் எட்டு பேருககு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு் உள்ளது. எழும்பூர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பரமசிவம் இதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

இன்று காலை 8.30 மணிக்கு விசாரணை

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி பவானி சுப்பபுராயன் முன்னிலையில் இன்று காலை 8.30 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

joseph
ஜூலை 07, 2024 23:17

ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் 8 வருடங்களுக்கு முன்னர் ஒரு வீடை விற்பதற்காகணுகினேன் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்


Kasimani Baskaran
ஜூலை 07, 2024 03:57

மெரினாவில் இடம் கொடுத்தால் நல்லது. வாயால் மட்டும் சமத்துவம் பேசும் வந்தேறிகளுக்கு இடம் கிடைக்கும் பொழுது ஒரு தமிழனுக்கு கிடைக்கக்கூடாதா? இந்தக்கொலையில் சரணடைந்ததாக முதலில் சொல்லப்பட்டது. அதை காவல்துறை கைது என்கிறது. சமூக வலைதங்களில் உபிஸ் கோரஸாக பாஜக தான் காரணம் என்று கதறுகிறார்கள். குருமா கண்டனம் தெரிவிக்கக்கூட பதறுகிறார். ஆக இது யார் வேலை என்று யூகிக்க முடிகிறது.


rama adhavan
ஜூலை 07, 2024 01:23

இவர் உண்மை பெயர் இதுதானா? இவர் என்னென்ன பொது சேவைகள் செய்தார்? எந்தெந்த கட்சியில் இருந்தார்?எதற்கு கட்சி அலுவலகம்? மைதானத்திலேயே செய்யலாமே?


S. Gopalakrishnan
ஜூலை 06, 2024 23:20

நாளை காலை நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்கப் போகிறாரா அல்லது நீதிபதி பவானி சுப்பராயன் விசாரிக்கப் போகிறாரா ?


நிலா
ஜூலை 06, 2024 22:44

கொலை செஞ்சவனே வீடியோ எடுத்து போட்டுக்.காடினாலும் அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லைன்னு சொல்லும் அரசியல் தத்திகளை நோண்டி நொங்கெடுக்கணும்.


ஆரூர் ரங்
ஜூலை 06, 2024 21:26

மெரீனா அடக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் நினைத்தும் பார்க்க முடியாது.


S. Gopalakrishnan
ஜூலை 06, 2024 23:22

அன்பரே, இவர் பெயரையே நான் இன்றுதான் கேள்விப்படுகிறேன் !


மேலும் செய்திகள்