உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1.19 லட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு: சிறப்பு அலுவலர்கள் நியமிக்க திட்டம்

1.19 லட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு: சிறப்பு அலுவலர்கள் நியமிக்க திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் என, அறிவிக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கும், சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவர்' என, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அ.தி.மு.க., ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள 1.19 லட்சம் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு, 2019ல் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பின், மற்ற மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு, 2021ல் தேர்தல் நடத்தப்பட்டது.இந்நிலையில், 2019ல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. மேலும், 2021ல் நடத்தப்பட்ட மாவட்டங்களுக்கு, 2026 செப்., மாதம் முடிவடைகிறது.இந்நிலையில், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள வளர்ச்சியடைந்த கிராம ஊராட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதனால், மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்த ஊரக உள்ளாட்சிகளுக்கு, சிறப்பு அலுவலர்கள் நியமிப்பதற்கான தீர்மானம், சட்டசபை கூட்டத்தொடரில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:மக்கள் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைய உள்ள, கிராம ஊராட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவதற்கான தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. அப்போது, 16 மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ள 149 ஊராட்சிகளுக்கும், 41 நகராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ள 147 ஊராட்சிகளுக்கும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவர். அதேபோல, மற்ற நகராட்சிகள், பேரூராட்சிகளில் இணைக்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளுக்கும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள், அந்த கிராமப் பகுதிகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும் வரை, சிறப்பு அலுவலர்களாக பணியாற்றுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sampath Rajan
ஜன 06, 2025 16:01

அப்படீன்னா அரசு அதிகாரிகளின் காட்டில் நல்ல மமழைதான்.


Karthik
ஜன 05, 2025 11:16

அப்படீன்னா இந்த ஆ பீஸர் ஆளுங்கட்சிக்கு "சிறப்பா செய்வார்" னு சொல்லுங்க.. வேலய சொன்னேங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை