உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தியாகராஜர் ஆராதனை விழா திருவையாறில் துவக்கம்!

தியாகராஜர் ஆராதனை விழா திருவையாறில் துவக்கம்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் 178வது ஆராதனை விழா துவக்க விழா இன்று நடந்தது. மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், விழாவை துவக்கி வைத்தார்.விழாவிற்கு, தியாக பிரம்ம சபாவின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y4ikk9j0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தியாக பிரம்ம ஆராதனை ஒரு நுாற்றாண்டை கடந்து நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு மன்னன் மன்னனாக இருக்க வேண்டும் என்றால் அரியணையில் மட்டும் இருந்தால் போதாது, மக்கள் மனது என்ற அரியணையில் அவர் வீற்றிருக்க வேண்டும். அப்போது தான் அவர் மன்னனாக இருக்க முடியும். நாம் ஒரு நல்ல விதைகளை விதைத்தாலும், அது எப்போது முளைத்தாலும் நல்ல கனிகளை தான் தரும். ஒரு குடும்பத்தை பார்த்தால் ஒருவரின் குணநலங்களை தெரிந்துக்கொள்ள முடியும் என நமது முன்னோர் கூறியுள்ளார்கள். காரணம் ஜாதி, படிப்பறிவு அல்ல. ஒருவன் எப்படி பிறரை நேசிக்கின்றான். பிறரோடு எப்படி நல்ல அனுகுமுறை வைத்து உள்ளான் என்பதை பொறுத்து தான். ஒருவன் நல்ல, கெட்டவன் என்பதை நிர்ணயம் செய்கிறது நமது தமிழ் கலாசாரம். எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், பெரியவர்களுக்கு மரியாதை தருவது தான் உண்மையான தமிழரின் நாகரிகம், கலாசாரம். நீங்கள் வாழும் போது நல்லவனாக போற்றப்படாமல் இருக்கலாம். ஆனால், நல்லவனாக வாழ்ந்து மறையும் போது தான், நீங்கள் மகத்தான தலைவராக சமூகத்தினால் உணரப்படுவீர்கள். வாழ்க்கை வெற்றி, தோல்வி என்பது, தேர்வுகளில் பெறும் வெற்றி மட்டும் வெற்றி என நினைத்து விட கூடாது. இறைவன் தந்த இந்த பிறப்பை நாம் ஒட்டுமொத்தமாக இந்த சமூகத்திற்கு பயன்படுத்துகிறோம் நாம் வாழ்ந்துக்காட்டுகிறோமோ வெற்றின் இலக்காகும். வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதமும் கடைபிடிக்க வேண்டிய குறைந்தபட்ச உண்மை எதுவன்றால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவது தான். கரைபுரண்டு ஓடும் கோதாவரியை காவிரியில் இணைக்க வேண்டும். இந்த தேசத்தில் உள்ள நதிகளை இணைக்காமல், இந்த தேசத்தின் நீர் தேவையை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என நம்புகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு உருவாகும். அது நமது பாரத பிரதமர் மோடியால் உருவாகும். இது அரசியல் அல்ல. தியாகராஜர் சபையில் கூறினால் பலிக்கும் என்பதற்காக தான் இதை கூறுகிறேன். தியாகராஜர், சாமா சாஸ்தரி, முத்துசாமி தீட்சிதர் என்ற மும்மூர்த்திகளை இந்த மண் தந்துள்ளது. இவர்கள் எப்போது ஜாதியை பார்த்தது கிடையாது. எங்கோ பிறந்த தியாகராஜர் திருவையாறுக்கு வந்து இசைப்பணியை செய்து விட்டு மறைந்தார். இசை என்பது மொழி, ஜாதி, மதத்திற்கும் அப்பறப்பட்டது. ஒரு நலல் இசையை கேட்டால் மனமும், ஆன்மாவும் திருப்தி அடையும். இசை என்பது முத்தமிழில் ஒன்று. இசை இந்த மண்ணை விட்டு ஒரு போதும் போகாது. 800 கீர்த்தனைகளில் 700 கீர்த்தனைகள் ராமாரை மட்டுமே பற்றி உள்ளது. அனுமனுக்கு பிறகு, ராமனை அதிகமாக துதித்தவர் தியாகராஜர் தான் மகத்தானவர். மன அமைதிக்கும் இறைபக்தி அவசியம். தனிநபர் ஒழுக்கம் சமூகத்தில் போற்றப்பட வேண்டும் என்றால், அந்த சமூகத்தில் இறைநம்பிக்கை அவசியம். அப்படியாக நுாற்றாண்டுகளை கடந்தும் நம்முடன் தியாகராஜர் போன்றவர்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். தியாகபிரம்மம் என்பது மகத்தான வேள்வி.இவ்வாறு அவர் பேசினார். விழாவின் முக்கிய நிழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்தல் வரும் 18 ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் சபாவின் பொருளாளர் கணேஷ், செயலாளர் பழனிவேல், ராஜாராவ், அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

நடராசன்
ஜன 17, 2025 18:32

பல் தேய்க்காத திராவிடியா பசங்க இங்கேயும் வந்துடுவானுங்களே?


Bye Pass
ஜன 14, 2025 20:37

பஞ்சரத்ன கீர்த்தனைகள் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷங்கள்


Anantharaman Srinivasan
ஜன 14, 2025 20:11

நாம் நல்ல விதைகளை விதைத்தாலும், நல்ல மண்வளமாகயிருந்தால் தான் முளைத்து பலன் தரும்.


அப்பாவி
ஜன 14, 2025 20:02

தியாகராஜர் எங்கோ பிறக்கவில்லை. திருவையாறிலேதான் பிறந்தார். சரியாப் பேசுங்க.


chandrashekhar raj
ஜன 14, 2025 22:07

அவர் பிறந்தது Thiruvarur


chandrashekhar raj
ஜன 14, 2025 22:08

அவர் பிறந்தது திருவாரூர் என்று kelvipatirukkirem


Ray
ஜன 15, 2025 00:03

அப்போ தியாகய்யர் வந்தேரியில்லை தெலுங்கரில்லை நல்லதாப்போச்சு


Ray
ஜன 15, 2025 00:03

அப்போ தியாகய்யர் வந்தேரியில்லை தெலுங்கரில்லை நல்லதாப்போச்சு


ஆரூர் ரங்
ஜன 15, 2025 11:15

பூர்வீகம் ஆந்திரா பிரகாசம் மாவட்டத்தில் உள்ள காகர்லா . பிறந்த ஊர் திருவாரூர்.