மேலும் செய்திகள்
20 பெட்டிகளுடன் 'வந்தே பாரத்'
17-Sep-2025
சென்னை:சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இயக்கப்படும், 'வந்தே பாரத்' ரயிலில், முன்பதிவு, 130 சதவீதமாக இருக்கிறது. பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. எழும்பூர் - நாகர்கோவில் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு, கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, திருநெல்வேலி வரை செல்லும் வந்தே பாரத் ரயிலும், கோவில்பட்டியில் நிற்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஆய்வு செய்த ரயில்வே வாரியம், எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில், கோவில்பட்டியில் நின்று செல்ல ஒப்புதல் வழங்கியுள்ளது.
17-Sep-2025