மேலும் செய்திகள்
மகனுக்கு பொறுப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் பதில்
06-Sep-2025
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை செயல்பாட்டுக்கும், என் செயல்பாட்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவர் போல், நான் இருக்க வேண்டியதில்லை; செயல்படவும் வேண்டியதில்லை. மாநில முதல்வர், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் நிறைய சலுகைகள், திட்டங்களை பெற முடியும். இது தெரிந்தும், மத்திய அரசுடன் தி.மு.க., தொடர்ந்து மோதி வருகிறது. இது இணக்கமான அணுகுமுறை அல்ல. என் மகனுக்கு பா.ஜ.,வில் மாநில பொறுப்பு கொடுத்ததும், பா.ஜ.,வும் குடும்ப கட்சி என விமர்சிக்கின்றனர். என் மகன், நான் தலைவராகும் முன்பே, பா.ஜ.,வில் பொறுப்பில் இருந்தவர். அமித் ஷா மகன் ஜெய் ஷாவுக்கு கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது குறித்தும், தி.மு.க.,வினர் விமர்சிக்கின்றனர். பொன்முடி மகனும் கிரிக்கெட் வாரிய பொறுப்பில் உள்ளார் என்பதை, அவர்களிடம் யார் சொல்வது? - -நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,
06-Sep-2025