உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பா.ஜ., கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை

 பா.ஜ., கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை

கடந்த 1977 முதல் எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர் செங்கோட்டையன். அ.தி.மு.க.,விற்கு தனி ஓட்டு வங்கி உள்ளது. த.வெ.க.,வில் செங்கோட்டையன் இணைந்ததால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் பின்னால் பா.ஜ., இருந்தால், அவர் த.வெ.க.,விற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. பா.ஜ., யாருக்கும் வாக்குறுதி அளிக்கவில்லை. செங்கோட்டையனும் விளக்கம் அளித்து விட்டார். ஜன., 15க்குள் அனைவரும் ஒருங்கிணைக்கப்படுவர். விஜய் தற்போது நடிகராகவே உள்ளார். கட்சி தொடங்கியவுடன் 'லாங் ஜம்ப், ஹை ஜம்ப்' உலகத்தை தாண்டுவோம் எனச் சொல்வது பொருத்தமில்லை. ஒரு தேர்தலில் நின்று தன் பலத்தை நிரூபிக்கட்டும். எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவராக கட்சி தொடங்கினார்; விஜய் நடிகராக தான் கட்சி தொடங்கியுள்ளார். தி.மு.க., ஆட்சியில் சொத்து வரி, மின்சார கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. பொங்கலுக்கு 5,000 ரூபாயை தி.மு.க., அரசு வழங்கினாலும், தேர்தல் நோக்கத்தில் என்பதால், மக்கள் அதை ஏற்றுக்கொள்வரா என்பது கேள்விக்குறி. -- நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை