மேலும் செய்திகள்
கடவுளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை
2 minutes ago
அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் திறமையானவர்கள்: வேலு
2 minutes ago
அவதுாறு பரப்புவோரை என்.ஐ.ஏ., கண்காணிக்கணும்
2 minutes ago
வேலுாரில் ஒரு நிகழ்ச்சியில், மா.கம்யூ., முன்னாள் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: வாக்காளர் திருத்த பணிக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளோம். இதில், உச்ச நீதிமன்றம் 10 நாளில் விசாரித்து தீர்ப்பு கொடுக்கப் போவதில்லை. சட்ட ரீதியாக செய்ய வேண்டியதை செய்திருக்கிறோம். வாக்காளர் திருத்தப் பணிக்கு ஆதரவாக வழக்குப் போட்ட ஒரே ஆசாமி, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிதான். அவருடைய ஓட்டு பறிக்கப் படும்போது, திருத்தப்பணியின் ஆபத்தை உணருவார். தேர்தல் கமிஷனுக்கு ஆதரவாக செயல்படுவதன் வாயிலாக, தேர்தல் கமிஷனை தன்வசப்படுத்தி, இரட்டை இலை தாவாவில் தனக்கு ஆதரவான உத்தரவை பெறலாம் என நினைக்கிறார். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால், குடியுரிமை அதிகாரிகளுக்கு நீக்கப்பட்டவர்கள் பட்டியல் அனுப்பப்படும். நாட்டு குடிமக்களின், குடியுரிமையை பறித்து, இரவோடு இரவாக அமெரிக்கா போல, இந்தியர்களை கை விலங்கிட்டு நாடு கடத்தி விடுவர். மோடி, அமித் ஷா ஆகியோர், எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும், உங்கள் அவதாரங்களை காலில் போட்டு மிதிக்கும் செயலை தமிழக வாக்காளர்கள் செய்வர். இவ்வாறு அவர் பேசினார்.
2 minutes ago
2 minutes ago
2 minutes ago