உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சினிமா இயக்குனரின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்து மன்னிப்பு கேட்ட திருடர்கள்

சினிமா இயக்குனரின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்து மன்னிப்பு கேட்ட திருடர்கள்

உசிலம்பட்டி : இயக்குனர் மணிகண்டனின் தேசிய விருது, நகை, பணம் ஆகியவை கொள்ளை போன நிலையில் தேசிய விருதை மட்டும் திருப்பி தந்து மன்னிப்பு கடிதம் வைத்து சென்றுள்ளனர் திருடர்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gpngjuu2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0‛‛காக்கா முட்டை, கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி'' போன்ற படங்களை இயக்கியவர் மணிகண்டன். இவற்றில் காக்கா முட்டை, கடைசி விவசாயி படங்களுக்காக தேசிய விருது வாங்கினார். இவரது மதுரை, உசிலம்பட்டி வீட்டில் கடந்த வாரம் திருட்டு நடந்துள்ளது. அவரின் 2 தேசிய விருதுக்கான பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுபற்றி உசிலம்பட்டி நகர் காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் இன்று(பிப்., 13) மணிகண்டனின் உசிலம்பட்டி வீட்டில் பாலித்தீன் பையில், ‛‛அய்யா எங்களை மன்னித்து விடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு...'' என குறிப்பிட்டு மன்னிப்பு கடிதத்துடன் இரண்டு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் கொள்ளையர்கள் தொங்க விட்டுச் சென்றுள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

panneer selvam
பிப் 14, 2024 00:47

Tamilnadu professional thieves are good in heart and understand the significance of their job. If they have errored in their work they are ready to correct it not justify it. Even this case , they sent a letter with the punch 'Your labour deserves '


N.Purushothaman
பிப் 13, 2024 16:03

இயக்குனர் திருட்டு திராவிட கட்சியின் போல ...வீட்டின் வர்ணம் காட்டி கொடுக்குதே ...


ஆரூர் ரங்
பிப் 13, 2024 11:55

பெரும்பாலான இயக்குநர்கள் கதைத்திருட்டில் ஈடுபடுகின்றனர். அவர்களில் யாராவது திருட்டை ஒப்புக் கொண்ட வரலாறுண்டா????? வசமாக சிக்கிக்கொண்டால் மட்டும் திரைமறைவில் சமரசம் செய்து கொள்வது உண்டு. ஆனால் அபூர்வம்.


ராஜவேல்,வத்தலக்குண்டு
பிப் 13, 2024 11:00

செய்யும் தொழிலும் நேர்மை, கண்ணியத்தை காப்பவர்கள் இளகிய மனம் இரக்க குணம் கொண்ட இவர்களை போன்ற மனிதர்களை பார்த்தாவது இங்குள்ள அரசியல்வாதிகள் திருந்த வேண்டும்.


Selva
பிப் 13, 2024 10:57

திருடர் சார். உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. உங்கள் செயலை வைத்து அப்படியே மணிகண்டன் "கடைசி திருடன்" என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுத்து விடுவார். அதற்கும் சேர்த்து உங்களுக்கு ஒரு நன்றி.


Bhaskar Srinivasan
பிப் 13, 2024 12:21

" கடைசி திருடர் " - மரியாதை ரொம்ப முக்கியம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை