உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இருவர் பலி

திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இருவர் பலி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் யானை மிதித்து பாகன் உள்ளிட்ட 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை யானை அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது உண்டு. இந் நிலையில், யானை கட்டி வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு சென்ற பாகன் உதயகுமார் பழங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். உடன் அவரது உறவினர் சிசுபாலன் இருந்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wjncrp5q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பழங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது யானை திடீரென திமிறி உள்ளது. நொடிப்பொழுதில் ஆக்ரோஷம் கொண்டு அருகில் இருந்த பாகன் உதயகுமார், சிசுபாலன் இருவரையும் தூக்கி போட்டு மிதித்தது.இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பாகன் உதயகுமார் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தார். யானை 2 பேரை மிதித்து கொன்றுவிட்டதை அறிந்த பக்தர்கள் பீதி அடைந்து ஓடினர். தகவலறிந்த கோவில் ஊழியர்கள் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டு, யானை தெய்வானை வழக்கமாக கட்டி வைக்கப்படும் இடத்திற்கு சென்றனர். பின்னர் நீரை பீய்ச்சி அடித்து யானையின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தினர். சம்பவம் பற்றி கால்நடை மருத்துவக்குழுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. யானையை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே எதனால் ஆக்ரோஷம் ஏற்பட்டது பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும் என்று கோவில் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Kasimani Baskaran
நவ 18, 2024 22:04

இந்து அறநிலையத்துறை யானைகளை பராமரிக்கும் லட்சணம் அனைவருக்கும் தெரிந்ததுதானே...


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 18, 2024 21:17

உன்கிட்ட சொன்னாரா


M Ramachandran
நவ 18, 2024 20:23

அங்கொ இங்கொன்றும் தவறுகள் நடக்கலாம். இப்போதும் காட்டில் பல குக்கிராமங்களில் மக்கள் வாழுகின்றனர். அவர்கள் எல்லோரும் யானைகளால் தாக்க படு வதில்லை. ஒரு சில நிகழ்வுகள் நடக்கலாம் இருந்தும் ஏழை எளிய மக்கள் அலகு தான் வாழ்கிறார்கள் மக்கள் வேறு மிருகங்களால் ஏன் நகரங்களில் நாய்களால் தாக்க படு வதில்லையா? அக்கால மன்னர்கள் போர் படையில் யானை படை முக்கியம் வகிக்கிறது.


kantharvan
நவ 18, 2024 23:07

நீர் அக்காலத்திற்கே சென்று விடு ராமா??


Ramesh Sargam
நவ 18, 2024 19:37

பக்தர்களுக்கு போதிய பாதுகாப்புடன் இருக்குமாறு யானைகளை கோவில்களில் வளர்க்கவேண்டும். இல்லையென்றால் வளர்க்கவே வளர்க்காதீர்கள். கடவுள் கோபித்துக்கொள்ளமாட்டார்.


kantharvan
நவ 18, 2024 23:06

உருப்படியான கருத்து.


முருகன்
நவ 18, 2024 19:18

யானைகளை ஆண்டு தோறும் புத்துனர்வு முகாமிற்கு அனுப்ப வேண்டும்


Rajesh
நவ 18, 2024 18:05

கோவில் யானைகள் மிகவும் தும்புறுத்தப்படுகின்றன , கேரளாவிலும் இப்படிதான் யானைகள் தும்புறுத்தப்படுகின்றன..... சுப்ரீம் கோர்ட் இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்


அப்பாவி
நவ 18, 2024 18:00

கோவில் யானைகள் கூட்டம் சேர்ப்பதற்காக.


R S BALA
நவ 18, 2024 17:45

மிக வேதனையான சம்பவம்.. ஆனால் யானை பாகர்களுக்கு இந்த ஆபத்து எப்போதும் தலைக்குமேல் கத்தி போன்றதுதான் அவர்கள் வாழ்வில்..


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 18, 2024 20:28

யானையின் சைக்காலஜி தெரிந்திருக்க வேண்டும் .... இந்த விஷயத்தில் கேரள பாகர்கள் கெட்டிக்காரர்கள் ..... யானையிடம் நின்று செல்ஃபி எடுப்பதும் அதற்கு கோபமூட்டும் ....


sribalajitraders
நவ 18, 2024 17:22

காட்டு விலங்குகளை காட்டிலேயே சுதந்திரமாக இருக்க விடுங்கள் தங்களின் சுயலாபத்திற்காக பயன்படுத்தும் மனிதர்களுக்கு இது ஒரு பாடம்


kantharvan
நவ 18, 2024 23:08

கடவுளின் லாபத்திற்கு


SENTHIL NATHAN
நவ 18, 2024 17:09

அனைத்து கோவில் யானைகளையும் முதுமலை யானைகள் பாதுகாப்பு மையத்தில் விட்டு விடுங்கள். முடிந்தவரை அவை இயற்கையோடு இணைந்து இருக்கட்டும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை