உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை கடிதம்

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இது குறித்து சட்டப்பேரவை அலுவலகம் தேர்த்ல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளது. கடிதத்தில் கூறப்பட்டுஇருப்பதாவது: சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளதுடன் இது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொன்முடியின் திருக்கோவில் தொகுதி காலியானதாக சட்டசபை அலுவலகத்திடம் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டும் என அதிமுகவினர் மனு அளித்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை