உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: திருமாவளவனால் தாங்க முடியவில்லை!

இது உங்கள் இடம்: திருமாவளவனால் தாங்க முடியவில்லை!

என்.வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'பாரதப் பிரதமர் மோடி, அயோத்தியில் நடத்தியது ஆன்மிக விழா அல்ல; அது அப்பட்டமான அரசியல் விழா' என்று கூறியுள்ளார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.'அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை, வரும் லோக்சபா தேர்தலில் ஜெயிக்க, தேர்தல் பரப்புரையாக பிரதமர் மோடி பயன்படுத்தி கொண்டிருக்கிறார்' என்றும் வியாக்கியானம் செய்திருக்கிறார்.திருமண விழாவை அரசியல் மேடையாக மாற்றி, தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களை வசைபாடி மகிழ்வோர், தி.மு.க. தலைவர்கள் என்பது ஊருக்கே வெளிச்சம்; அதெல்லாம் திருமாவளவன் கண்டுகொண்டது இல்லை.நம் பிரதமர் மோடி, ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை சாதாரணமாக நடத்தி முடிக்கவில்லை... 11 நாட்கள் கடுமையாக விரதம் இருந்து, வெறும் இளநீரும், பாலும் மட்டும் பருகி, கோவில் திறப்பு விழாவை நடத்தி முடித்திருக்கிறார்.அது மட்டுமல்ல... பஞ்சு மெத்தையில் உறங்காமல், வெறும் தரையில் துணி விரித்து, 'ஏசி' இல்லாமல், துாங்கி விரதத்தை முடித்திருக்கிறார். உலகமே வியந்து பாராட்டும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை நடத்தி, பேரும் புகழும் பெற்று விட்டதை திருமாவளவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.அதன் வெளிப்பாடு தான் திருமாவளவனை இப்படி உளறிக்கொட்ட வைத்துள்ளது. ராமனுக்கு செருப்பு மாலை அணிவித்து அசிங்கப்படுத்திய, ஈ.வெ.ரா.வின் வாரிசுகளுடன் கூட்டணி வைத்திருக்கும் திருமாவளவனிடம் இருந்து, நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை