உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம்: திருமாவளவன்

ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம்: திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “ஆணவ கொலைகளை தடுக்க, தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்,” என, முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னை கோயம்பேடு, 100 அடி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, அவரது பிறந்த நாளையொட்டி, வி.சி., தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

பின் அவர் அளித்த பேட்டி:

அம்பேத்கர் பிறந்த நாளை, 2020ல் இருந்து வி.சி., அனைத்து உலக சமத்துவ நாளாக அறிவித்தது. அன்றைய தினம், 'ஜாதியை ஒழித்து, சமத்துவம் படைப்போம்' என, உறுதிமொழி ஏற்று வருகிறோம். கடந்த 2022லிருந்து, ஏப்., 14ஐ சமத்துவ நாளாக அறிவித்து, தமிழக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.இந்தியாவிலேயே, தமிழக அரசுதான் இந்நாளை சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. ஆணவ கொலைகளை தடுக்க, தனி சட்டம் இயற்ற வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இது தொடர்பாக முதல்வருக்கு சமத்துவ நாளில் வேண்டுகோள் விடுத்துள்ளோம். முதல்வர் இந்த கோரிக்கையை பரிசீலித்து, சட்டம் இயற்றி, பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

c.mohanraj raj
ஏப் 15, 2025 10:18

நாடகக் காதல் அதிகமானால் அது என்ன ஆணவக் கொலை கௌரவக் கொலை செய்யத்தான் செய்வார்கள்


பேசும் தமிழன்
ஏப் 15, 2025 07:40

வேங்கை வயல் சம்பவம் பற்றி வாயே திறக்காத... நீயெல்லாம் அம்பேத்கர் அவர்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது..... இன்னும் இவனை நம்பி கொண்டு இருந்தால்..... அந்த சமூக மக்களை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 15, 2025 06:48

அம்பேத்கர் ஆணவக்கொலையை நிறுத்த கட்டப்பஞ்சாயத்து நடத்தி சம்பாரி ன்னு சொன்னாரா ??


சந்தான கிருஷ்ணன் உசிலம்பட்டி
ஏப் 15, 2025 05:11

அப்படியே இந்த நாடக காதல் தொல்லைக்கு கூட தனிச் சட்டம் கேளுங்க திரு மாமா வளவன்


மீனவ நண்பன்
ஏப் 15, 2025 01:37

ரொம்ப நல்லவர் .. சமத்துவ நாளில் தமிழ் புத்தாண்டு தெரிவிக்க வாய் வலித்ததோ என்னமோ


vinoth kumar
ஏப் 15, 2025 01:33

எந்த ஆதாயத்தையும் எதிர்பாராமல், தவறு மற்றும் தண்டனை உண்டு என்று தெரிந்தும், பெற்று வளர்த்த பிள்ளைகளையே கொலை செய்யும் பெற்றோரை சட்டம் போட்டு தடுக்க முடியாது . இங்கு சாதி பிரச்னை இல்லை. தகுதிதான் பிரச்னை. பிற சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்யும் ஒரு தலித் இளைஞன் ஒரு ஐ ஏ எஸ் அல்லது ஐ பி எஸ் அதிகாரியாக இருந்தால் அங்கு ஆணவ கொலை நடக்குமா? அதே இளைஞன் சரியான படிப்பு இல்லாமல் , கூலி வேலை செய்பவனாகவோ அல்லது வேலை அற்றவனாகவோ இருக்கும்போது அந்த காதல் பெண்ணின் பெற்றோரால் ஏற்றுக்கப்படுவதில்லை. அதனால் திருமாவளவன் அவர் சாதி இளைஞர்களை முதலில் நன்றாக படித்து தகுதியை வளர்த்துக்கொண்டு பிறகு பிற சாதி பெண்களை காதல் செய்ய அறிவுறுத்தினால் ஆணவ கொலைகள் ஒழியும். சட்டத்தால் சாதியை அழிக்க முடியாது. ஆனால் கல்வியால் சாதி பாகுபாட்டை அழிக்க முடியும்.


புதிய வீடியோ