உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: ஹிந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்பாரா?

இது உங்கள் இடம்: ஹிந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்பாரா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்சி மாவட்டம், சிறுகனுாரில் சமீபத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின், 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டில், 'பெரும்பான்மைவாத அரசியலை புறக்கணிப்பது' என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.சிறுபான்மையினராக இருந்தாலும், அவர்களும் நம் உடன்பிறப்புகள் தான். அவர்கள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்பவர்களை விட, நம் நாட்டில் சகல உரிமைகளுடனும், நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை எவரும் மறுக்க மாட்டர். அவர்களை அரவணைப்பதில் தவறில்லை.நம் நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மதச்சார்பின்மை பேசுகின்றன. ஆனால், சிறுபான்மையினருக்கு மட்டுமே பகிரங்கமாக ஆதரவு கொடுக்கின்றன. இந்தியா வின் சொந்த மதமான ஹிந்து மதத்தை எந்த கட்சியும் ஆதரிப்பதே கிடையாது.அது மட்டுமா...? ஹிந்துக்களை திருடர்கள் என்றும், சனாதனத்தை ஒழிப்போம் என்றெல்லாம் வேறு சீண்டி பார்க்கின்றனர். இதை எல்லாம் கண்டிக்க, பா.ஜ., கட்சியை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் முன்வருவதில்லை.இதுவரை ஹிந்துக்கள் ஒற்றுமையில்லாமல் இருந்ததால், ஜாதிக் கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகளும் பலன் பெற்று வந்தன. ஆனால், இப்போது அரசியல் கட்சிகளின் போலி மதச்சார்பின்மையை ஹிந்துக்கள் நன்றாக உணர்ந்து விட்டதால், இப்போது ஒன்றுபட்டு வருகின்றனர்.வி.சி.,க்கள் மாநாட்டில், 'பெரும்பான்மைவாத அரசியலை புறக்கணிக்க வேண்டும்' என்று, பலருக்கும் தெளிவாக புரியாத விதத்தில் கூறப்பட்டுள்ள தீர்மானத்தை, 'பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்களின் ஓட்டுகள் எங்களுக்கும், எங்கள் கூட்டணி கட்சிகளுக்கும் தேவையில்லை' என்று தெளிவாக அறிவிக்க திருமாவளவன் முன்வருவாரா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

M Ramachandran
பிப் 04, 2024 13:23

திருட்டு மா. சுய புத்தி உள்ள இந்துக்கள் இந்த ஆள்லு க்கும் 2G. புகழ் ராசாவிர்க்கும் ஒருபோதும் ஒட்டு போட மாட்டார்கள்


பேசும் தமிழன்
பிப் 04, 2024 12:49

அவனுக்கு ஓட்டு போடுபவன்.... இந்துவாக இருக்க மாட்டான்.... இந்து பெயரில் சலுகை அனுபவித்து கொண்டு இருக்கும்... மதம் மாறிய கும்பலாக இருக்கலாம்.


P.Sekaran
பிப் 04, 2024 12:02

இந்த தடவை சிதம்பரத்தில் நின்றால் ரோசமுள்ள ஒரு இந்துக்களும் வோட்டு போடமாட்டகள் தோற்கடிக்க வேண்டும் அப்பொழுதுதான் கட்டை பஞ்சாயது கோல்மால் வேலையெல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது எந்த ஊழலுக்கும் எதிர்த்டு குரல் கொடுக்காதவர் மதுவை ஒழிக்காதவர் எப்படி தேர்தலில் நின்று வோட்டு கேட்பார். பணத்தை வைத்துதான் ஓட்டு கேட்பார் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்


g.s,rajan
பிப் 04, 2024 10:47

விடுதலை சிறுத்தைகளிடம் இருந்து நாட்டு மக்களுக்கு விடுதலை என்று கிடைக்குமோ ...???


vbs manian
பிப் 04, 2024 09:39

என்ன இது புது உளறல்.


sonki monki
பிப் 04, 2024 09:31

தமிழக போலீஸ் போட்ட உயிர் பிச்சை, தஞ்சை மண்ணிலே இவனை போட்டு தள்ளி இருப்பார்கள்


Rajarajan
பிப் 04, 2024 09:29

இவர் ஹிந்துக்கள் வோட்டு வேண்டாம் என்றாலும், அடிமைகள் கேட்கவா போகிறார்கள். அப்படியிருந்தால், தமிசகத்தில் தி.மு.க. என்றோ மண்ணை கவ்வி இருக்கும். ரூபாய் இருநூறு, குவாட்டர், பிரியாணி மற்றும் இத்துடன் இலவசங்கள், வோட்டுக்கு பணம் இருக்கும் வரை, இவர்களை யாரும் அடிச்சிக்க முடியாது.


sonki monki
பிப் 04, 2024 09:21

இவன் கேட்டாலும் வோட்டு கண்டிப்பாக இவனுக்கு இல்லை


சங்கையா,முதுகுளத்தூர்
பிப் 04, 2024 09:00

தனித்து நிற்கவும் வக்கு இல்ல திமுகவை எதிர்த்து பேசவும் துப்பு இல்ல ஆனா பேரு மட்டும் சிறுத்தை!


Saisenthil
பிப் 04, 2024 07:36

Vote கிடைக்காது இனிமேல்...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை