உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலில் எங்களை எதிர்த்து நிற்போர் அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவர்

அரசியலில் எங்களை எதிர்த்து நிற்போர் அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார் : ''அரசியலில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள், அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவர்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலுார் மாவட்டம் பொன்னை பகுதியில், பொன்னை ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் மேம்பாலம் மற்றும் பொன்னை அரசினர் மேல்நிலை பள்ளியை, தமிழக முதல்வரின், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின்படி, ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன், நிருபர்களிடம் கூறியதாவது:கேரள அரசுடன் முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து பேச்சு நடத்த தயார். முல்லை பெரியாறு ஒன்றும் பிரச்னையில்லை.மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக அரசு ஆய்வு செய்தாலும், அவர்கள் படம் வரைந்தாலும், அந்த திட்டத்திற்கு தமிழக அரசின் ஒப்புதலும், மத்திய அரசின் ஒப்புதலும் வேண்டும். அதையெல்லாம் மீறி, நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். மழை, வெள்ளம் பாதிப்பு குறித்து, நீர் பாசனத்துறை சார்பில், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை இன்று தான் துவங்கியுள்ளோம். அரசியல் என்பது திருவிளையாடல் தான். நாங்கள் தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறோம். தி.மு.க., இன்னும் கூட்டணி பேச்சை துவக்கவில்லை.காங்கிரஸ் மட்டும் பேசிவிட்டு சென்றுள்ளனர். அரசியலில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவர். பழையவைகளை பேசுவது சரியல்ல. 'இண்டியா' கூட்டணியில் இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை. அதன் பின்னரே யார் இருக்கிறார்கள், யார் செல்கின்றனர் என்பது தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

samvijayv
பிப் 02, 2024 12:42

இன்னும்கருணாநிதி தான் திமுகவை வழி நடத்திக்கொண்டுள்ளார் என்று நெனப்பு திரு,துரைமுருகன் அவர்களுக்கு. சற்று நிகழ்காலத்திற்கு வாரும்திரு,துரைமுருகன் அவர்களே,நடப்பது சேப்பாக்கம் சேகுவாராவின் வழியில் (ஆட்சி) நடக்கிறது மற்றும் இப்பொழுது எங்களை எதிர்த்து நிற்போர்அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவர்கள்என்று கனல் நீர் போல உள்ளது உங்ககளின் நெனப்பு.


h
பிப் 01, 2024 21:34

gone are those days. dmk will destroy themselves with corruption and looting.


Rajasekar Jayaraman
பிப் 01, 2024 20:52

அவ்வளவு பயம் உங்களுக்கு.


fox
பிப் 01, 2024 19:46

கூட எங்க வருவாங்க ? ஜெயில்ல களி திங்கவா ....


K.Ramakrishnan
பிப் 01, 2024 18:50

காங்கிரசை எதிர்த்தீங்க... பிறகு அவங்க பக்கம் போனீங்க.. பா.ஜனதாவை ஆதரிச்சீங்க.. இப்ப எதிர்க்கிறீங்க..ஆனால்.. வாஜ்பாயை மட்டும் A good man, in a wrong party... அப்படிங்கிறீங்களே..


Sridhar G
பிப் 01, 2024 17:50

அரசியலில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவர்....நீங்கள் சொல்லவருவது ADMK ? வயா ?


Hari
பிப் 01, 2024 17:35

அதைத்தான் ராமதாஸ் சொன்னாரே யாரிடம் வேணாலும் பேசலாம் ஆனால் கருணாநிதி கும்மாளிடம் மட்டும் பேச செல்லவே கூடாது தெருவில் கோமணம் கட்டிக்கிட்டு போறவனை கூப்பிட்டு உனக்கு பட்டு வேஷ்டி தர்றேன்னு கருணாநிதி கூப்பிடுவார் அதை நம்பி போனால் நாம் கட்டியுள்ள அந்த கோவணத்தையும் உருவிட்டு தெருவில் தள்ளிவிடுவார் இதுதான் தி மு க வின் திருட்டுத்தனம். எனஎங்களுக்கு ராமதாஸ் உசார் படுத்திவிடடார்.


DVRR
பிப் 01, 2024 17:29

நாங்கள் சாக்கடை எல்லோரும் சாக்கடைக்குத்தான் வரவேண்டும் கடைசியில் என்று சொல்வது மிக மிக தெளிவாகத்தெரிகின்றது


rama adhavan
பிப் 01, 2024 17:24

கட்சி இருந்தால் வருவர்.


HoneyBee
பிப் 01, 2024 17:11

பாவம் அடுத்த தேர்தலில் இவருக்கு சீட்டு இருக்கான்னு பார்க்கனும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை