உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாம்பழ சின்னம் கிடைத்துவிட்டது என்று கூறுவோர் போலிகள்: ராமதாஸ்

மாம்பழ சின்னம் கிடைத்துவிட்டது என்று கூறுவோர் போலிகள்: ராமதாஸ்

திண்டிவனம்: திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற வன்னியர் சங்க கூட்டம் நடந்தது. வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின், ராமதாஸ் கூறியதாவது: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக, வரும் டிசம்பர் முதல் வாரத்தில் வன்னியர் சங்கம் சார்பில், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இதில், 30 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், மாணவியர் மட்டுமே கலந்து கொள்வர். இது தொடர்பாக, ஜி.கே.மணி தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு, எந்த மாதிரி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யும். தமிழகமே கிடுகிடுக்கும் அளவில் போராட்டம் நடத்தப்படும். பொய் பொய்யாக பேசியவர்கள் வேஷம் கலைந்து விட்டது. பொய் சொன்னவர்கள் ஏன் பொய் சொன்னோம் என ஏங்கப் போகின்றனர். 'பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், 8,௦௦௦ பேர் கலந்து கொண்டனர். பா.ம.க., வன்னியர் சங்கம் என்றால், அது நாங்க தான்' என்றும் சொல்கிறது ஒரு கும்பல். அதையெல்லாம் கேட்க என்னை போன்றவர்களுக்கே வெட்கமாக இருக்கிறது. எப்போ அன்புமணியை கட்சியை விட்டு நீக்கினோமோ, அப்போதே அவர்கள் வேஷம் கலைந்துவிட்டது. மாம்பழ சின்னம் கிடைத்துவிட்டது என்று கூறுபவர்கள் போலிகள். இவ்வாறு அவர் கூறினார். ஜப்பானில் பா.ம.க., போட்டி? ராமதாசிடம், அன்பு மணி தரப்பினர் பீஹாரில் மாம்பழ சின்னத்தில் போட்டியிடப்போவதாக கூறுவது பற்றி கேட்ட போது, 'அவர்கள் தென்கொரியா, ஜப்பான், மொரீஷியஸ் தீவு ஆகிய இடங்களில் கூட மாம்பழ சின்னத்தில் போட்டியிடுவர்' என்று கிண்டலாக பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை