உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தமிழக கோயில்களில் பூஜை, அன்னதானம்: ராமேஸ்வரத்தில் அண்ணாமலை பேட்டி

இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தமிழக கோயில்களில் பூஜை, அன்னதானம்: ராமேஸ்வரத்தில் அண்ணாமலை பேட்டி

ராமேஸ்வரம்: ''அயோத்தியில் இன்று (ஜன., 22) ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தமிழகத்தில் கொண்டாட அரசு தடை விதித்தாலும் மக்கள் கோயில்களில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கி கொண்டாடுவர்,'' என, ராமேஸ்வரத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.துாய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி அண்ணாமலை நேற்று ராமேஸ்வரம் ராமர் கோயிலில் துாய்மை பணி செய்தார். பின் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார்.பின் அவர் கூறியதாவது:2029ல் உலக இளைஞர்கள் விளையாட்டுப்போட்டிகள், 2036ல் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார்.ஸ்ரீராமபிரான் பூஜித்த இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி அரிச்சல்முனை, கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் தரிசனம் செய்துள்ளார்.இரவு எளிமையான முறையில் தங்கிய நிகழ்வு இந்திய வரலாற்றில் வேறு எந்த பிரதமரும் செய்யாதது. இது மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. 500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தமிழகத்தில் கொண்டாட அரசு தடை விதித்து இருப்பது கண்டனத்திற்குரியது.சனாதனத்தின் ஆணி வேராக இருக்க கூடிய கோயில்கள் மற்றும் வீடுகளில் மக்கள் சிறப்பு பூஜை, பிரார்த்தனை செய்து அனைத்து பகுதியிலும் அன்னதானம் வழங்கி கொண்டாடுவர். இதை தமிழக அரசு எந்த முயற்சி எடுத்தாலும் தடுக்க முடியாது.சனாதன தர்மத்தை நம்புகிறவர்கள் அனைத்து மதத்தையும் சமமாகத் தான் பார்க்கின்றனர். இதனை தி.மு.க.,வினர் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை என்றார்.பா.ஜ., மாவட்ட தலைவர் தரணிமுருகேசன், பார்வையாளர் முரளிதரன், ராமேஸ்வரம் நகர் தலைவர் ஸ்ரீதர் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி