உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருது..! வருது...! கேரளாவில் 5 நாட்களுக்குள் தென் மேற்கு பருவமழை!

வருது..! வருது...! கேரளாவில் 5 நாட்களுக்குள் தென் மேற்கு பருவமழை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அடுத்த 5 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. தெற்கு அரபிக்கடல் பகுதி, மாலத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை 5 நாளில் துவங்க வாய்ப்புள்ளது' என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

25% அதிகம்

மழை குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 25% கூடுதலாக பெய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=krc8qajh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் நாளை (மே 28) முதல் மே 30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ