உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேலத்தில் சோகம்; கடன் தொல்லையால் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை

சேலத்தில் சோகம்; கடன் தொல்லையால் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை

சேலம்: சேலம் அரிசி பாளையம் அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த பால்ராஜ், ரேகா, ஜனனி தற்கொலை செய்து கொண்டனர்.சேலம் அரிசி பாளையத்தில் பால்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் வெள்ளி பட்டறை நடத்தி வந்தார். இவர் கடன் தொல்லை காரணமாக சிக்கி தவித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஜன.,28) பால்ராஜ், மனைவி ரேகா மற்றும் மகள் ஜனனி ஆகியோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Senthil
ஜன 29, 2025 14:50

விதி இப்படி செய்து விட்டது


Senthil
ஜன 29, 2025 14:49

விதி


ஜவஹர் பாலசுப்ரமணியன்
ஜன 29, 2025 14:46

இந்த சூழலில் அரசாங்கம் ஏதேனும் உதவிகள் செய்யும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.ஒரு சமூக அமைப்பாக நாம் தோற்றதாகவே கருத வேண்டும்.வெறும் வார்த்தைகள் எதற்கும் பயன்தராது.


Kannan Palanisamy
ஜன 29, 2025 09:56

ரொம்ப பாவம்


Star Hacks
ஜன 28, 2025 20:18

வருந்துகிறேன் ... பாவம் மனுஷன் புள்ளயும் பொண்டாட்டியும் சாக போகுதேனு தெரிஞ்சி மனசு அளவுல எவ்ளோ நொந்து இருப்பாரு... எப்படி கடனாளி ஆனாருனு தெரியல ஆனா ரொம்ப பாவம்.. வாய்க்கு வந்தபடி பேசாதீங்க...


Mohana Sundaram
ஜன 28, 2025 20:12

கடன் என உள்ளது. தொழில் தோல்வி காரணம்.


Mohana Sundaram
ஜன 28, 2025 20:09

கடன் காரணமாக இருக்கலாம். தொழில் தோல்வி.


Ungal thozhan Santa
ஜன 28, 2025 20:00

அவர் எதுக்கு கடன் வாங்கினார்...என்ன தெரியாம சில ஜென்மங்க வாய்க்கு வந்ததை பேசுறாங்க...அவர் ஆடம்பரமாக வாழ்ந்து தான் கடன் பட்ட மாதிரி...தொழிலுக்காக வாங்கி நஷ்டம் அடைந்திருக்கலாம், இது போன்ற கேடு விளைவிக்கும் ஜென்மங்கள் ஏமாற்றி இருக்கலாம்...தெரிஞ்ச மாதி பேச வருவானுங்க


R SRINIVASAN
ஜன 29, 2025 06:51

கடன் தொல்லையால் நிறைய பேர் செத்துக்கொண்டிருக்கிறார்கள் .இதற்கு காரணம் போதிய பொது அறிவு மக்களுக்கு இல்லை. அதாவது நேர்மையாக தொழில் செய்பவர்கள் கணக்கு போட தெரியாமல் கோட்டை விடுகிறார்கள். ஆனால் வங்கியில் பொய் பாருங்கள். கடன் வாங்கும் பெரிய முதலைகள் எப்படியெல்லாம் பொய் சொல்லி ஜமாய்க்கிறாரகள் என்று.


chennai sivakumar
ஜன 28, 2025 14:02

வரும் நாட்களில் இது போன்ற நிகழ்வுகள் அதிகம் வரும். காரணம் ஆடம்பர செலவுகள் அதற்கு கட்ட முடியாத emi போன்றவற்றினால். தகுதிக்கு ஏற்ப செலவின்செய்யும் வழக்கம் சுத்தமாக போய்விட்டது குறிப்பாக நடுத்தர மக்களிடம். யாரை குற்றம் சொல்ல முடியும்??


SUBRAMANIAN P
ஜன 28, 2025 13:48

சிறு கடன் அன்பை முறிக்கும். பெருங்கடன் உயிரையே குடிக்கும்.. கடனுக்கு வீடு, காரு, கல்யாணம் செலவு செய்துவிட்டு இன்று விழிபிதுங்கி தற்கொலையே செய்துகொள்ளும் அளவுக்கு போறவங்க நிறைய.. சிறு குழந்தைகள் பாவம் அது என்ன செய்யும்..