உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுபாட்டில் பதுக்கிய ஏட்டு இடமாற்றம்

மதுபாட்டில் பதுக்கிய ஏட்டு இடமாற்றம்

கடலுார் : வாகன சோதனையில் சிக்கிய மதுபாட்டில்களை மறைத்து வைத்த புகாரில் ஏட்டுவை இடமாற்றம் செய்து எஸ்.பி.,ராஜாராம் உத்தரவிட்டார்.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளிமாநில மதுபானங்கள் கடத்தி வருவதை தடுக்கும் பொருட்டு கடலுார் ஆல்பேட்டையில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் பிடிபட்டார். மதுபாட்டில்களை பறிமுதல் செய்த கடலுார், திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஏட்டு செல்வம், அதை அழிக்காமல் தனியாக மறைத்து வைத்ததாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக எஸ்.பி., ராஜாராம் விசாரணை நடத்தி, ஏட்டு செல்வத்தை கடலுார் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்