உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பறிமுதல் குட்காவில் கைவரிசை போலீஸ்காரர் பணியிட மாற்றம்

பறிமுதல் குட்காவில் கைவரிசை போலீஸ்காரர் பணியிட மாற்றம்

சென்னை:ஓட்டேரி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களில் கைவரிசை காட்டியதாக, நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சென்னை, ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்குள் நடந்த சோதனையில், பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 770 கிலோ போதை வஸ்துகள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற வழக்குக்கு ஆதாரமாக வைக்கப்பட்டிருந்த இந்த போதை வஸ்துக்களை, கடந்த டிச., 5ம் தேதி சாதாரண உடையில் இருந்த காவல் துறையைச் சேர்ந்தவர் எடுத்துச் சென்று, வெளியே நின்றிருந்த ஒருவரிடம் கொடுத்துள்ளார்.இக்காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. வாகனத்தில் வைக்கப்பட்ட குட்கா பொருட்களுடன் அந்த நபர் செல்லும் காட்சியும் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவியது.இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் வெங்கடேசன், மேற்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் துறைரீதியான விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜன 07, 2024 13:10

அரசாங்க பணிகளில் உள்ள குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்காமல் இடமாறுதல் செய்து ஊக்குவிக்கும் பணிதான் நடக்கிறது இந்த நாட்டில்.இதனால் 2047 ல் நேர்மையானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் மத்திய மாநில அரசு பணிகளில்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை