உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜன.,9 முதல் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் அறிவிப்பு

ஜன.,9 முதல் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு தோல்வி அடைந்ததை அடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 9-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு செய்துள்ளன.ஒய்வூதியம் மற்றும் ஊதிய உயர்வு , காலிபணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலத்துறை மற்றும் போக்குவரத்து துறை இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தின. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி.,ஹெச்.எம்.எஸ்., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றாகவும், அண்ணா தொழிற்சங்கம் தனியாக என இரு தரப்பாக வரும் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. ஓய்வு பெற்றோரின் பஞ்சப்படி விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளமுடியாது. கோரிக்கைகள் தொடர்பாக மீண்டும் மீண்டும் நேரம் கேட்பது எங்களை ஏமாற்றுவதாக உள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக எதுவும் வழங்கவில்லை என சி.ஐ.டி.யூ.,சவுந்தரராஜன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajarajan
ஜன 04, 2024 12:11

காலம் போன நிலையில், வாதம் வந்த கதை.


ராமகிருஷ்ணன்
ஜன 04, 2024 11:47

அப்போ இந்த வருடம் போக்குவரத்து ஸ்ட்ரைக் பொங்கல் தான். டிரான்ஸ்போர்டை தனியாருக்கு தந்தால் மட்டுமே பிரச்சினைகள் தீரும். பிராமண துவேசத்தால் TVS யிடமிருந்து டிரான்ஸ்போர்டை புடுங்கிய கட்டுமரம் செய்த பாவம் தான் இது. அனுபவிடா.


Ramesh Sargam
ஜன 04, 2024 01:00

8 -ஆம் தேதி சாயங்காலம் ஒரு அறிவிப்பு வரும். ஆம், உங்கள் பிரச்சினைகளை அரசு தீர்த்துவைக்கும். இப்பொழுதைக்கு வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுங்கள் என்று. உடனே, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டுவிடுவார்கள்.


K.Ramakrishnan
ஜன 03, 2024 22:40

உங்களுக்கு எல்லாம் அம்மா ஆட்சி தான் சரி... ஒரே சமயத்தில் 2லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார். ஸ்டிரைக் செய்தவர்களை எல்லாம் வேலை இல்லை போ...என்றார். சாட்டையை கையில் எடுப்பேன் என்றார். அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்தார்கள். அம்மா ஆட்சி இருக்கிற வரை, யாராவது பஞ்சப்படி,பயணப்படி வேண்டும் என்று கேட்டார்களா? இல்லையே... அது தான் நிர்வாகத் திறன் மிக்க ஆட்சி. ஸ்டாலின் கொடுத்துக் கொண்டே இருந்தால்... போதாது என்று தான் கேட்பார்கள். ஜெயலலிதா என்ற இரும்புப்பெண்மணியிடம் மற்ற அரசியல்வாதிகள் பாடம் கற்க வேண்டும்...


ஆரூர் ரங்
ஜன 03, 2024 20:56

பாதி பேருக்கு ஓஷி டிக்கட்????‍????. அதனால சில்லறை சம்பாத்தியம் கொறஞ்சு போச்சு.


Bye Pass
ஜன 03, 2024 19:56

அரசாங்கம் டாஸ்மாக் நடத்துவதில் முழு கவனம் செலுத்தலாம் …இந்த மாதிரி பஸ் சர்வீசுகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம்


R S BALA
ஜன 03, 2024 19:11

ஏற்கனவே கிளம்பாக்கம் ஒரு வேதனை இதுல இவிங்க வேற..


Sivak
ஜன 03, 2024 19:07

அதுதான் பாதி பேர் பஸ்ஸுல ஓ சி ல போகலாம்னு சொல்லிட்டாங்க இல்ல ... போங்க போங்க உங்களுக்கு எல்லாம் ஒன்னும் கிடையாது... ஓ சி ல கொடுக்கும்போது நல்லாத்தான் இருக்கும் அப்புறம் குத்துதே குடையுதேன்னா என்ன பண்றது ?? உங்க சங்கம் அரசியல் லாபத்திற்காக திருட்டு திமுக அரசு ஓ சி ல பஸ்ஸுல போலாம்னு சொல்லும்போதே திருப்பி கேள்வி கேட்டிருந்தா கொஞ்சம் யோசிச்சி இருப்பானுங்க.


Ram
ஜன 03, 2024 18:55

ivanugaluku makkali kastapadutharathuthan velai ,


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை