உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., கூட்டணியில் இணைய 100 சீட்; அடம் பிடிக்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்

அ.தி.மு.க., கூட்டணியில் இணைய 100 சீட்; அடம் பிடிக்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்

சென்னை: 'அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வேண்டும் என்றால், 100 தொகுதிகளை விட்டுத் தர வேண்டும்' என , த.வெ.க., தலைவர் பிடிவாதம் காட்டுவதாக, தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க., தலைவர் விஜய், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஆட்சியை பிடிக்கப் போவதாக கூறி வந்தார். இதற்காக மாநிலம் முழுதும், மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2wwj4ir2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, சனிக்கிழமைகளில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்வதற்கான பட்டியலையும் விஜய் வெளியிட்டார். எதிர்க்கட்சி தலைவர் திருச்சி, அரியலுார், திருவாரூர், நாகப்பட்டினம் , நாமக்கல் மாவட்டங்களில், அவர் பிரசாரம் மேற்கொண்டார். அவரை பார்ப்பதற்கு பெருமளவில் கூட்டம் கூடியது. இந்நிலையில், கரூரில், செப்டம்பர் 27ம் தேதி இரவு நடந்த விஜயின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட, 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, வீட்டிலேயே விஜய் முடங்கியுள்ளார். மழை பாதிப்பு, நெல் கொள்முதல் பிரச்னை, பயிர் பாதிப்பு என அடுத்தடுத்த பிரச்னைகள், தமிழகத்தில் நடந்து வரும் நிலையில், அதுகுறித்து வாய் திறக்காமல் விஜய் மவுனமாக உள்ளார். இதனால், விஜய் தன் கட்சியை தொடர்வாரா என்ற சந்தேகத்தில், த.வெ.க., தொண்டர்கள் உள்ளனர். இதற்கிடையே, த.வெ.க.,வை கூட்டணியில் இணைப்பதற்கான பணிகளில், அ.தி.மு.க., தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமியின் மகன் மிதுன், விஜயை இரண்டு முறை தனியாக சந்தித்து பேசியுள்ளார். பா.ஜ., அல்லாத கூட்டணி அமைக்கும் பட்சத்தில் , அதில் இணைய விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 100 தொகுதிகள் வரை, த.வெ.க.,விற்கு வழங்க வேண்டும் என்பதிலும், விஜய் பிடிவாதமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: துவக்கத்தில் த.வெ.க., வுக்கு 20 தொகுதிகள் வரை தருவதாக, அ.தி.மு.க., தரப்பில் சொல்லப்பட்டது. தற்போது, 40 தொகுதிகள் தர உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால், த.வெ.க., தலைவர் விஜய், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஆவதற்கும் வாய்ப்புள்ளது என, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஆனால், பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்கு, விஜய் அரசியல் கட்சி துவங்கவில்லை. சினிமாவில் போராடி உச்சத்திற்கு வந்த விஜய், தன் தலைமையிலேயே தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறார். அடகு வைக்க மாட்டேன் எனவே, பழனிசாமி முதல்வராவதற்கு, த.வெ.க., கட்சியை அடகு வைக்க மாட்டேன் எனக் கூறி விட்டார். அதேநேரம், த.வெ.க.,விற்கு 100 தொகுதிகளை தருவதாக இருந்தால், கூட்டணிக்கு சம்மதிக்கலாம் என கூறியுள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 25, 2025 19:53

இது விஜய்க்கு தெரியுமா?


sampath, k
அக் 25, 2025 19:33

Six months time may be given to VIJAY to win in any one of the constituency after making him as Chief Minister. Till such time, he need not come out from his house.


Nanchilguru
அக் 25, 2025 18:26

விஜய்யை முதல்வர் ஆக்கிட்டு அப்புறம் கூட எலக்சன் வச்சிக்கலாம்


Vasan
அக் 25, 2025 18:25

அ.தி.மு.க+த.வே.க கூட்டணி அமைய சாத்தியம் இல்லை. சிபிஐ அறிக்கை விஜய் குற்றமற்றவர் என்று அறிவித்த பின் விஜய்க்கு பிஜேபியும் தேவையில்லை, அதிமுகவும் தேவையில்லை. பழைய படி சனி தோறும் கிளம்பி விடுவார். பாருங்களேன், இப்படி தான் நடக்க போகிறது.


Anbuselvan
அக் 25, 2025 18:22

இது வேலைக்கு ஆகாது. விஜய் அவர்கள் காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைதான் நாட வேண்டும். தவெக 145, காங்கிரஸ் 40, விசிக 25, கம்யூனிஸ்ட் கட்சிகள் 20 மற்ற உதிரிகள் 4. ஆட்சியில் நிச்சயம் பங்கு உண்டு. இது மட்டும்தான் வேலைக்கு ஆகும்.


T.sthivinayagam
அக் 25, 2025 17:54

விஜய் ஜீ அவர்கள் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரா அல்லது துணை முதல்வர் வேட்பாளரா என்பதை பொறுத்தே சீட்டுகள் என தொண்டர்கள் கூறுகின்றனர்.


MP.K
அக் 25, 2025 16:17

ஜெயலலிதாவை முதல்வராக்கிய விஜயகாந்தின் நிலை என்ன ஆனது? பழனிசாமியை முதல்வராக்கிய சசிகலாவின் நிலை என்ன ஆனது ? இது குறித்து சிந்தித்து விஜய் கூட்டணி அமைக்க வேண்டும்.


Oviya Vijay
அக் 25, 2025 16:00

கற்பனை செய்திகள் பல உலா வருகின்றன... அவற்றில் இதுவும் ஒன்று... எழுதியது யாரோ...


saravanan
அக் 25, 2025 15:11

திரையில் தோன்றும் மின் பிம்பங்கள் மக்களின் மனத்திரையை ஆக்கிரமித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது தற்போதைய கால கட்டத்தில் சின்னத்திரை அல்ல அதைவிட சிறிய திரையான யூடியூபில் சற்று பிரபலமானாலே புகழ் வந்துவிடுகிறது பைக் ரேஸ் வீடியோக்களை பதிவிட்ட வந்த டி டி எப் வாசன் என்பவர்க்கு சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் கூடிய கூட்டமே நல்ல உதாரணம் ஆகவே கூடும் மக்கள் கூட்டத்தை பார்த்தெல்லாம் எந்தவொரு முடிவுக்கும் வந்து விட முடியாது. இதுவரை தேர்தல் அரசியலையே நேரிடையாக களமாடி பலத்தை நிரூபிக்க முடியாதவர்களை எந்த அடிப்படையில் நம்பி தொகுதி பங்கீடு குறித்து ஆய்வு செய்வது நடிகருக்கும் ஆட்சி கட்டிலில் துயில் கொள்வது போன்று கனவு காண உரிமையில்லையா என்ன? பாஜக இடம்பெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்த அணியாகவே தெரிகிறது


SUBRAMANIAN P
அக் 25, 2025 14:30

எடப்பாடி எதுக்கு விஜய பிடிச்சு தொங்கிகிட்டு இருக்காரு.. அவரு மேலயே அவருக்கு நம்பிக்கை இல்ல போல... விஜயல எல்லாம் வரமுடியாது.. மண்ணைக்கவ்வ போறாரு பாருங்க.. அதுக்கு பிறகு சினிமாவில இருந்து ஒருபய அரசியலுக்கு வரமாட்டான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை