உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாத்துக்குடி ஏர்போர்ட் செயல்பட துவங்கியது

துாத்துக்குடி ஏர்போர்ட் செயல்பட துவங்கியது

துாத்துக்குடி : பிரதமர் மோடி கடந்த 26ம் தேதி திறந்து வைத்த துாத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் நேற்று முதல் செயல்பட துவங்கியது. துாத்துக்குடி விமான நிலையத்தில், 886 ஏக்கர் பரப்பளவில், 452 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலக தரத்திலான விமான நிலைய முனையத்தை கடந்த 26ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து, ஆடிப்பெருக்கை முன்னிட்டு, புதிய விமான நிலைய முனையம் நேற்று முதல் செயல்பட துவங்கியது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் புதிய விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சென்னையில் இருந்து வந்து இறங்கிய பயணிகளுக்கு ரோஜா மலர் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் விமான நிலைய இயக்குனர் காட்வின் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை