உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் மாநாடு சக்சஸ்; இமாலய இலக்கு; இனிமேல் தான் இருக்கு!

விஜய் மாநாடு சக்சஸ்; இமாலய இலக்கு; இனிமேல் தான் இருக்கு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள த.வெ.க., தலைவர் விஜய் இனி அடுத்து செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன என்கின்றனர் சமகால அரசியலை கவனிப்பவர்கள்.

மாநாடு

சொன்னபடி வந்தார், அரசியல் கட்சியை அறிவித்தார். நேற்று விக்கிரவாண்டி சாலையில் முதல் மாநாட்டை நடத்தியும் முடித்து விட்டார் நடிகர் விஜய். மாநாடு முடிந்துவிட்டாலும் இன்னும் அதே ஜோரில் தான் உள்ளனர் த.வெ.க., தொண்டர்கள்.

அவசியம்

அரசியல் களத்தில் கால் பதித்தாகிவிட்டது. இனி நடிகர் விஜய் அடுத்து செய்ய வேண்டியது என்ன? அதற்கு திட்டமிடல்கள் மிக அவசியம் என்று அடிக்கோடிட்டு காட்டுகின்றனர் அரசியலை ஆழ்ந்து கவனிப்பவர்கள். இது குறித்து அவர்கள் கூறும் கருத்துகள் இதுதான்;

சினிமா

தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய போது அரசியலை நடிகர் விஜய் நினைத்து பார்த்து இருக்கமாட்டார். குழந்தை நட்சத்திரம், பின்னர் கதாநாயகன், அதன் பின்னர் மாஸ் ஹீரோ என கட்டங்களை தாண்டி இப்போது சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் அவர் இருக்கிறார். திரையுலகில் பல ஆபர்கள்(offer) இருந்தும் அதை ஓரம் கட்டிவிட்டு அரசியல் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார்.

3 லட்சம் பேர்

திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் சூழலில் அரசியலை கையில் எடுத்திருப்பது சாதாரணமானது அல்ல. மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் என்கிறது காவல்துறை. 234 தொகுதிகளில் இருந்தும் இவர்கள் வந்திருக்கிறார்கள்.

தேர்தல் கள அரசியல்

3 லட்சம் பேர் என்பது தொடக்க அரசியல் களத்தின் முதல் மாநாட்டுக்கான மாஸ் கூட்டம் என்றாலும் இந்த கூட்டத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வது அல்லது அதை அதிகரிக்க வேண்டும் என்றால் அதை தமது செயல்பாடுகள் மூலமே விஜய் செய்து காட்ட முடியும்.

கள எதிரி

தமிழக அரசியலில் தி.மு.க.,வை எதிர்கொள்வது எளிதானது அல்ல. அதற்கான திட்டமிடல் அவசியம். அதையும் விட மிக அவசியம் அந்த திட்டமிடலை செயலாக்குவது.

பயணம்

2026ம் ஆண்டு தேர்தல் பணிகளை என்றோ தொடங்கி, நாள்தோறும் அந்த பணிகளை கட்சி நிர்வாகிகள் மூலம் ஸ்கேன் செய்து வாக்கு வங்கி அரசியலை தி.மு.க., ஸ்திரப்படுத்தி வருகிறது. அ.தி.மு.க.,வும் அப்படியே. அரசியல் அனுபவம் கொண்ட ஏனைய கட்சிகளும் வாக்கு வங்கி அரசியலை நோக்கி ஜரூராக பயணம் செய்ய ஆரம்பித்துள்ளன.

ஓட்டுகள்

இந்த தருணத்தில் விஜய் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளம். அதில் முதலில் கட்சியின் அடையாளமாக தாம் மட்டுமே அறியப்படுகிறோம் என்பதை மாற்ற வேண்டும். வெறும் தமது முகமும், குரலும், அதையும் தாண்டிய போட்டோ, வீடியோக்கள் மட்டும் ஓட்டுகளை தராது என்பதை அவர் புரிந்து கொண்டால் போதும்.

எதிர்வினை

நடப்பு கால அரசியலில் மக்களின் மனோநிலை என்ன? ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் என்ன என்பதை உற்று கவனிக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகள், அரசின் அறிவிப்பு, திட்டங்கள் செயலாக்கம், மற்ற அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு போன்றவற்றை ஆழ்ந்து கவனித்து, எதிர்வினையாற்ற வேண்டும். தமது கட்சியில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் சென்று சேரும் வகையில் தயார்படுத்த வேண்டும். கட்சியில் பல்வேறு அணிகளை அமைத்து, அவற்றை ஒருங்கிணைத்து கட்சியின் நிலைப்பாடுகளை மக்கள் மன்றத்தில் மேடைகள் மூலமாகவும், பேட்டிகள் மூலமாகவும் கொண்டு சேர்க்க வேண்டும்.

கட்டமைப்பு

அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு எதிர் வினையாற்ற, அடுத்த கட்ட தலைவர்களை தயார் செய்வது அவசியம். முதல் கட்ட தலைவர்கள், 2ம் கட்ட தலைவர்கள், செய்தித் தொடர்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், பகுதி கிளை செயலாளர்கள் என கட்டமைப்புகள் இல்லாமல் தேர்தலை சந்திப்பது, கண்ணை கட்டி காட்டில் விட்டதற்கு சமம். கட்சியில் பல்வேறு அணிகள், அதில் உறுப்பினர்கள் சேர்க்கை, அதன் எண்ணிக்கையை உயர்த்த எடுக்க வேண்டியவை, தொண்டர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க அவ்வப்போது போராட்ட அறிவிப்புகள், கட்சியின் உயிர்த் துடிப்பான தொண்டர்களை கட்டுக்குள் வைத்திருத்தல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அறிக்கை

தமிழக அரசியல் களம் இனி தன்னை சுற்றியே நகர வேண்டும் என்பதில் திடமாக களமாட வேண்டும். பிளைட் மோட் (flight mode) என்ற அரைகுறை அரசியலை அப்படியே ஓரம் வைத்து விட்டு, எந்நேரமும் கள அரசியல் மூடில் இருப்பது பலன் தரும். கட்சியை ஆரம்பித்து, சில மாதங்கள், அறிக்கை விட்டு பின்னர் எங்கே இருக்கிறோம் தொண்டர்களே தேடும் அளவுக்கு இருந்தால் மிகவும் கடினம்.

அபிமானம்

அரசியலில் சண்டை போடுகிறோம் என்பதை விட யாருக்காக, எதற்காக சண்டை போடுகிறோம் என்பதை தெளிவாக மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டாலே அவர்களின் அபிமானங்களை அள்ளி விடலாம். எதிரி என்று விஜய் குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் கூட, சக்சஸ் என்று சொல்லும் அளவுக்கு விக்கிரவாண்டி மாநாடு வெற்றிகரமாக நடந்தேறி விட்டது. 'முதல் தடையை மட்டுமே அவர் தாண்டியிருக்கிறார். அவர் கடந்து செல்ல வேண்டிய இமாலய இலக்கு இனிமேல் தான் இருக்கிறது' என்கின்றனர், அரசியல் கட்சியினர்.மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் மக்காக இல்லாமல் கிக்காக, கெத்தாக இருந்தால் நம்மை கொத்தாக அங்கீகரிப்பார்கள் என்பதை உணர்ந்தால் போதும். கட்சியிலுள்ள வெற்றி என்ற பெயருக்கு ஏற்ப எதிர்கால அரசியல் அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Mohan
நவ 23, 2024 14:59

ஐயா, இவர் யாருங்க?? ஐயா இவுரு யாருங்க, ஜக்கி சாமியார் மாதிரி ஜிங்கு ஜங்குன்னு ஓடராரு ஒடியாராரு. ஐயா, செம டிபரண்டுங்க, இவரும் இவரது அஜிஸ்டெண்டு புஸ்ஸி ஆனந்தும் சேர்ந்து எல்லா கட்சிங்களோட கொள்கைகளை கூடையில் போட்டு குலுக்கி விட்டு,தேவையான பத்து பதினைந்து கொள்கைகளை எடுத்துக்கிறாங்கோ மாநாட்டில் அறிவிக்கிற வரைக்கும் அவருடைய விசிலடிச்சாங்குஞ்சு ரசிகர்களுக்கு தங்கள் தளபதி இடது போவாரா வலது போவாரான்னே தெரியாது. எவ்ளோ சிறப்பான விசயம்???. கொள்கை, கோட்பாடு, லட்சியம் எல்லாம் தளபதிக்கும், புஸ்ஸிக்குமே வெளிச்சம். நல்ல ரசிகர்கள, நல்ல தலைவன் இவருடைய கூட்டத்தை நம்பி திருமாவும், எடப்பாடியும் கூட்டு சேர ரெடி ஆனாங்கோ பழுத்த அரசியல்வாதிகளிடம் இவுரும் கட்சியும் மாட்டி, நார், நாராக பிய்யப்போறாங்க, பார்க்கத்தானே போறோம் அந்த வேடிக்கையை&₹


Nallavan
நவ 18, 2024 13:30

சில பெண்கள் தான்தான் இந்த நாட்டிலேயே அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் , சிலர் நான் தான் நடிப்பு உலகில் கொடி கட்டி பார்க்கவேண்டும் என்று நினைப்பார்கள், இவர் எதிர் வரும் காலத்தில் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார் என்ன தவறு, கற்பனை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு, கற்பனை நிஜமானால்


Mahendran R
அக் 31, 2024 15:12

விஜய் அரசு ஊழியர்களை பற்றி பேசியிருக்க வேணடும் உடலில் மூளை சிறியதாக இருந்தாலும் அதன் வேலை மிக பெரியது. அவர்களை தன் பக்கம் இழுக்க வேண்டும். இனியாவது செய்யுங்கள்.


Mahendran R
அக் 31, 2024 15:04

விஜய் மாநாடு நல்ல தான் போய்கொண்டிருந்து, கடைசியில் கூட்டணிக்கு துக்கடா கட்சிகளையும் அய்யோக்கியர்களையும் அழைத்தது பகீர் என்று ஆகி விட்டது. இதுவரையில் பார்த்தவர்களெல்லாம் நல்லவரகளே அல்ல,என்று தானே மக்கள் உங்களை ஆதரிக்கின்றனர். பிறகு என்ன இது மாதிரி. பத்தோடு பதினொன்றாகி விட்டது. தனித்தன்மை இல்லாமல் சப்பென்று ஆகிவிட்டது.


N.G.RAMAN
அக் 29, 2024 14:09

மதவாத அமைப்புகளின் ஆதரவோடு களம் இறங்கி இருக்கிறார் விஜய். 15,% வாக்குகள் நிச்சயம். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கே தெரியாது. அவர் தற்பொழுது ஒரு எந்திரன் மட்டுமே. திமுகவுடன் கூட்டணி அமைத்து உத்யன்னா முதல்வர், விஜயன்னா துணை முதல்வர் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டால் வெற்றி நிச்சயம். பிச்சை இடும் அமைப்புகள் என்ன நினைக்கிறதோ அதுதான் நடக்கும்.


Karuthu kirukkan
அக் 29, 2024 06:36

நடுச்சம்மா, நாலு காசு பார்த்தமனு போகாம ,அடுத்த கமல் , சரத்குமார் , விஜயகாந்த ,சிவாஜி ,T.R, போன்றோர்களின் பட்டியலில் ஒருவரா இருக்க கூடாது ..கப்பு முக்கியம் பிகிலு ..


Kasimani Baskaran
அக் 29, 2024 05:37

பெரியாரின் கொள்கையை திருடி அதை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஆக்கி தமிழனை வெல்லப்போவது நாங்கள்தான் என்று மார்தட்டுவது முதல் கோணல் போல தெரிகிறது. அண்ணா என்பவர் பெயரளவிலேயே காட்சிகள் பயன்பாட்டுக்கு உதவுகிறார் - மற்றப்படி இப்பொழுதெல்லாம் அவர் பெயரை மட்டும் பார்க்க முடிகிறது - படத்தை காட்சிக்கூட்டங்களில் பார்க்க முடிவதில்லை.


J.V. Iyer
அக் 29, 2024 04:11

விஜய் அண்ணா உங்கள் கொள்கையும், தீராவிஷ கட்சி கொள்கையும் ஒன்றாக உள்ளதால், இருவரும் சேர்ந்து பயணித்தால் என்ன? அதிமுகாவையும் கூட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


Anantharaman Srinivasan
அக் 28, 2024 23:10

கட்சி ஆரம்பித்து இரண்டேயாண்டுகளில் ஆட்சியை பிடிப்பதென்பது முடீயாத காரியம். விஜய் ஒருவனை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள். மேலும் அரசியல் செய்யத்தெரிந்த தலைவர்களும் கட்சியில்லை.


narayanansagmailcom
அக் 28, 2024 22:35

திமுக வின் தற்போதைய இலவசங்கள் நாளை மக்கள் கழுத்தை அறுக்கும் அஸ்திரங்களாக மாறும். அதை கடந்த மூன்று ஆண்டுகளாக பார்த்து கொண்டு இருக்கிறோம். அதனால் திமுகவின் கனவு பலிக்காது. ஓட்டுக்கள் பிரியும் போது தான் கூட்டணி முடிவாகும்.


புதிய வீடியோ