உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தியாகபிரம்ம மகோத்சவம் பாரத தேசத்தின் சொத்து

தியாகபிரம்ம மகோத்சவம் பாரத தேசத்தின் சொத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா சார்பில் நேற்று ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 177வது ஆராதனை துவக்க விழா நடந்தது.த.மா.கா., தலைவரும், ஸ்ரீ தியாகபிரம்ம மகோத்சவ சபா தலைவருமான வாசன் தலைமை வகித்தார். சிட்டி யூனியன் வங்கித் தலைவரும், நிர்வாக இயக்குநருமான காமகோடி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.விழாவில் வாசன் பேசும் போது, ''தியாகராஜ சுவாமிகளின் புகழையும், கர்நாடக இசையையும் உலகம் முழுவதும் பரப்புவது தான் தியாகராஜ ஆராதனை விழாவின் உயர்ந்த நோக்கம்,'' என்றார்.சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி பேசியதாவது:ராமரை பார்த்தாக கூறியது தியாக பிரம்மம் தான். இது போல கூறியவர்கள் மிகவும் குறைவு. ராமபிரானைப் பார்த்து தன் அனுபவங்களை எழுதி பதிவு செய்துள்ளார். ராம நாமத்தை 96 கோடி முறை ஜபம் செய்தால், ராமரைப் பார்க்க முடியும் என்பதை உறுதிபடுத்தியவர் தியாகராஜ சுவாமிகள்.இவ்வாறு பேசினார்.இவ்விழாவில், சபாவின் நிர்வாகிகள் சந்திரசேகர், சுரேஷ், கணேஷ் மற்றும் இசைக் கலைஞர்கள், இசை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, சபா செயலர் அரித்துவாரமங்கலம் பழனிவேல் வரவேற்றார். நிறைவாக, சபா செயலர் ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் நன்றி கூறினார்.தொடர்ந்து, ஜனவரி 30ம் தேதி காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனை வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை