உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் அறிவிப்பால் உதயநிதி அப்செட்

முதல்வர் அறிவிப்பால் உதயநிதி அப்செட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துணை முதல்வர் பதவி தொடர்பாக தனக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை, தந்தையும், முதல்வருமான ஸ்டாலின் மீறி விட்டார் என்ற காரணத்துக்காக அமைச்சர் உதயநிதி, 'அப்செட்' ஆகி இருப்பதாக தி.மு.க., வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது.

இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை, துணை முதல்வர் ஆக்க வேண்டும் என, ஓராண்டுக்கு முன்பிருந்தே குடும்பத்தில் இருந்து குரல்கள் எழும்பின. முதல்வர் ஸ்டாலின், உரிய நேரத்தில் பொறுப்பு வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vrtop34s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சம்மதம்

பல மாதங்கள் கடந்த நிலையில், சமீபத்தில் உதயநிதியை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என, குடும்பத்தில் இருந்து மீண்டும் அழுத்தம் வந்தது. அதையடுத்து, முதல்வரும் சொன்ன வாக்கை காப்பாற்றுவதற்கான முடிவுக்கு வந்தார். தேர்ந்த ஜோதிடர்கள் வாயிலாக நாள் குறிக்கப்பட்டது. 'வரும் 24ல் உதயநிதியை துணை முதல்வராக பொறுப்பேற்க வைக்கலாம்; அதற்கு முன், அது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம்' எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதே நேரத்தில், வரும் 21ல் சேலம் இளைஞர் அணி மாநாட்டில், துணை முதல்வர் பதவியை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளில், கட்சியின் இளைஞர் அணி நிர்வாகிகள் தயார் செய்யப்பட்டனர். இந்த விஷயம் முழுக்க, அமைச்சர் உதயநிதியின் முழு சம்மதத்துடனே நடந்து வந்தது. இதன் ஒரு அங்கமாகத்தான், சில நாட்களுக்கு முன், சென்னையில் நடக்கும,'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிக்கு அழைப்பு விடுக்கும் விதமாக பிரதமர் மோடியை, உதயநிதி டில்லி சென்று சந்தித்தார்.அப்போது, 'தி.மு.க., அரசுக்கு, நிதி விஷயத்தில் மத்திய அரசு பெரிய மனதோடு உதவ வேண்டும்' என்ற கோரிக்கையையும் வைத்தார். அது தொடர்பாகவும் இருவரும் பேசினர். இது உதயநிதியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் நிகழ்வாகவே குடும்பத்தினராலும், கட்சியினராலும் பார்க்கப்பட்டது. இதனால், எப்படியும் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டு விடுவோம் என்ற எண்ணம் உதயநிதிக்கு ஏற்பட்டது. ஆனால், உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க போகிறோம் என்று பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் வதந்தி என, முதல்வர் ஸ்டாலின் திடீரென குண்டு போட்டார். இது, உதயநிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னணியை விசாரித்தபோது, அரசியலை தாண்டி அரசில் முதல்வருக்கு நெருக்கமாக இருந்து பணியாற்றும் சில அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் உளவுத்துறை அறிக்கை ஆகியவை, முதல்வர் மனதை மாற்றியது தெரிய வந்து உள்ளது.

கிடப்பில்

உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்பட்டால், லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க.,வை எதிர்க்கும் ஆயுதமாக இந்த விவகாரமே முக்கிய பிரசாரமாகி விடும்; அதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதே உளவுத்துறை அறிக்கையின் சாராம்சமாக இருந்தது. லோக்சபா தேர்தல் முடிந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு எடுத்தே, உதயநிதியை துணை முதல்வராக்கும் விஷயத்தை ஸ்டாலின் கிடப்பில் போட்டார். ஆனால், பெரும் எதிர்பார்ப்பில் இருந்து உதயநிதி, இதனால் ஏமாற்றம் அடைந்தார். அவரது அதிருப்தி செயல்வடிவில் வெளிப்பட்டது. வழக்கமாக பொங்கல் நாளில், கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், குடும்ப உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று, 100 ரூபாய் அன்பளிப்பு பெறுவர். இந்தாண்டும் அது நடந்தது. தங்கம் தென்னரசு முதல், சேகர்பாபு வரை அமைச்சர்கள் பலரும் முதல்வரை சந்தித்து, பொங்கல் வாழ்த்து பெற்றனர். உதயநிதி மனைவி கிருத்திகா, முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, 100 ரூபாய் பரிசும் பெற்றார். ஆனால், அமைச்சர் உதயநிதி, அன்று முழுதும் முதல்வரை சந்திக்கவே இல்லை. அமைச்சருக்கான தன் குறிஞ்சி இல்லத்தை விட்டு நகரவில்லை. மறுநாள், தனியார், 'டிவி' சேனல் ஒன்று, 'இளைஞர்கள் வழிகாட்டி அமைச்சர் உதயநிதி' என்ற தலைப்பில், கலந்துரையாடல் மற்றும் பேட்டிக்காக ஏற்பாடு செய்து, அதை பதிவு செய்வதற்காக, உதயநிதி தங்கியிருந்த குறிஞ்சி இல்லத்துக்கு காலை 8:00 மணிக்கே சென்றது. இந்த நிகழ்ச்சியை பதிவு செய்து, சேலத்தில் நடக்க இருக்கும் இளைஞர் அணி மாநாட்டுக்கு முன், நான்கு நாட்களுக்கு தினமும் அரைமணி நேரம் ஒளிபரப்ப வேண்டும் என்பது திட்டம். சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேசி, அதற்கு ஏற்பாடு செய்தது முதல்வர் தான்.

மாற்றி மாற்றி

ஆனால், ஒப்புக் கொண்டபடி, தொலைக்காட்சி நிகழ்ச்சி பதிவுக்கு உதயநிதி வரவில்லை.நேரத்தை மாற்றி மாற்றிச் சொல்லி, மாலை 6:00 மணிக்கு, 'தொண்டையில் புண் இருப்பதால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது' என்று கூறி, தொலைக்காட்சி ஊழியர்களை திருப்பி அனுப்பினார். விளையாட்டு துறை அமைச்சராக, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இருந்த திட்டமும் ரத்தானது. இரு நாட்களுக்குப் பின், குடும்ப உறுப்பினர்கள் வற்புறுத்தல் மற்றும் சமாதானத்துக்குப் பின், மதுரை அலங்காநல்லூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு உதயநிதி சென்றார். ஆனாலும், முதல்வருடன் இதுவரை அவர் பேசவில்லை. இதுதவிர, தன் கணவருக்கு மேலும் மேலும் பொறுப்புகளை கொடுத்து சுமையை ஏற்ற வேண்டாம் என, மாமனார் ஸ்டாலினிடம், மருமகள் கிருத்திகா வலியுறுத்தி கூறியதால் தான், துணை முதல்வர் விஷயத்தை, முதல்வர் ஸ்டாலின் தள்ளி போட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

krishnan
ஜன 24, 2024 11:23

உங்கள் குழந்தைக்கு மெடிக்கல் உதவி தேவை பட்டால் நல்ல டாக்டரிடம் கூட்டி போவீங்களா அல்லது ஒன்றியம் குன்றியம் என பினாத்திக் கொண்டிருப்பவிராடம் போவீங்களா ..


Suresh Shanmugam
ஜன 24, 2024 07:21

பொம்மை முதல்வர், துணை முதல்வர் , இணை முதல்வர் , துணை இணை முதல்வர் , முதல்வருல் முதல்வர், இரண்டாம் முதல்வர் , மூன்றாம் முதல்வர் எப்பா எவன் அப்பன் பணம் இது.


K.Balasubramanian
ஜன 23, 2024 20:44

ஒரு யோஜனை . உதயநிதி இணை முதல்வர் , சபரீசன் உதவி இணை முதல்வர் , இன்பநிதி உதவி துணை முதல்வர் , என்று பதவிகளை வழங்கிவிட்டால் , பொறுப்பு சுமையும் இருக்காது , பொறாமை சுமையும் இருக்காது . துரை முருகன் , மற்ற மூத்த அமைச்சர்களும் , தங்கள் வேலைகளை தொடருவார்கள் . ( கூட்டுக்கொள்ளை ) தமிழகமும் அமைதி பூங்காவாக தொடரும் . எங்கும் ஊழல் , எதிலும் ஊழல் என்ற சமூக நீதியும் காக்கப்படும் திராவிட மாடல் அரசும் எழுச்சியுறும்


ellar
ஜன 23, 2024 09:58

மிகவும் மாறிவிட்ட இந்த 10 ஆண்டுகளில் வாரிசு அரசியல் என்பது கட்சிகளுக்கு ஒரு பெரும் தலைவலியாக மாறப்போகிறது என்பதை முன்பே அறிந்து கொள்வது நலம்


Kumar
ஜன 23, 2024 04:21

இரண்டும் சரியான தத்திகள். யாரு வேண்டுமானாலும் முதல் அமைச்சராகவோ அல்லது துணை முதல் அமைச்சராகவோ இருந்துவிட்டு போகட்டும். ......


M Ramachandran
ஜன 21, 2024 12:01

நம்பிக்கை இல்லை.எப்படியோ இந்த லட்சணம் இப்போ தெரிந்து விட்டது. முதல்வர் ஸ்டாலினுக்கும் நிர்வாக திறமையில்லை தன வாரிசுக்கு நிர்வாக திறமையில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்து விட்டது


Vasu
ஜன 20, 2024 21:16

ஐயோ நூறு ருபாய் பரிசா, உதயா அத வச்சு பெரிய வீடெல்லாம் கட்டுவார்.


INNER VOICE
ஜன 19, 2024 17:46

குடுமப அரசியல் . துணை முதல்வரை வீட்டிலுள்ளவங்கதான் தீமானிப்பார்களா?ஆனால், "அமைச்சர் உதயநிதி, அன்று முழுதும் முதல்வரை சந்திக்கவே இல்லை." என்னங்க மகன் அப்பாவை பாக்காலை ன்னு சொல்லவேண்டியதுதானே ...


NicoleThomson
ஜன 18, 2024 20:43

வாரிசு அரசியல் திமுகவிற்கு புதிதா என்ன? எருமைமாடு மாதிரி இருந்தாலும் MP பதவி கிடைக்கும்


kuppusamy India
ஜன 18, 2024 14:04

கிராம உதவியாளர் வேலைக்கு கூட லாயக்கில்லாத நபர்.


Chandhra Mouleeswaran MK
ஜன 20, 2024 23:12

பா - ஆ - ஆ - வங்க "தென்னாட்டுப் பப்பு" வை அப்படியெல்லாம் கிராம உதவியாளர் நிலைக்கும் கீழே வைக்கக் கூடாது சபரியைக் கேட்டுப் பாருங்க "வேறு மாதிரி" ஒரு அப்பட்டமான பெயரைச் சொல்லும் அதனால் தான் சபரி இதைத் துணை முதல்வர் இடத்திற்குப் போய்விடாமல் மாமனாரின் கடிவாளத்தி மெட்டிப் பிடித்துக் கொண்டது பாவ் - ஆ - ஆ - வங்க பப்பு


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை