மேலும் செய்திகள்
முதல்வருக்கு மா.கம்யூ., கோரிக்கை
5 minutes ago
நமக்கான புதிய சட்டங்களை நாமே உருவாக்க வேண்டும்
47 minutes ago
சென்னை: 'என் பிறந்த நாளில், மழை, வெள்ளம் பாதித்த இடங்களில், நிவாரணப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: என் பிறந்த நாளை ஒட்டி, தமிழகம் முழுதும், தி.மு.க.,வினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். பகட்டான கொண்டாட்டங்களை, நான் விரும்புவது இல்லை. ஏழை, மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் உள்ளிட்டோருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இளைஞர் அணி நிர்வாகிகள், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். என்னை நேரில் சந்தித்து, வாழ்த்து கூற வருவோர், புத்தகங்கள், கருப்பு - சிவப்பு வேஷ்டிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களைக் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5 minutes ago
47 minutes ago